Connect with us

பொழுதுபோக்கு

அடிக்கிறதுக்கு எதுக்குயா இதெல்லாம்… நான் நல்ல நடிகன் இல்ல; தளபதி குறித்து ரஜினிகாந்த் சொன்னது!

Published

on

thalapathi movie

Loading

அடிக்கிறதுக்கு எதுக்குயா இதெல்லாம்… நான் நல்ல நடிகன் இல்ல; தளபதி குறித்து ரஜினிகாந்த் சொன்னது!

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னத்தின் படைப்புகளில் பணியாற்றுவது ஒரு தனித்துவமான அனுபவம் என்று கூறியுள்ளார்.குறிப்பாக, 1991ஆம் ஆண்டு வெளியான ‘தளபதி’ திரைப்படத்தில் நடித்தபோது, மணிரத்னத்தின் இயக்கும் பாணி முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததால், தான் சற்று சிரமப்பட்டதாக ரஜினி மனம் திறந்துள்ளார்.தளபதி (1991) திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கிளாசிக் படமாகக் கருதப்படுகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நடிகர் அரவிந்த் சாமி கூட இந்தப் படத்தின் மூலம்தான் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.இத்திரைப்படம் மகாபாரதத்தில் கர்ணன் மற்றும் துரியோதனன் இடையேயான நட்பை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி தளபதி படத்திற்காக இயக்குநர் மணிரத்தினத்துடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து அன்ஸ்க்ரிப்டட் ஈகோ யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது மணிரத்னம், “இதை உணர்ந்து செய்யுங்கள், அவன் இதைச் செய்தான், அதைச் செய்தான், இப்படி அடிக்க வேண்டும்” என்று விரிவாக விளக்குவாராம். இதைப்பற்றி ரஜினி கூறுகையில், “அடிக்க வேண்டியதற்கு எதற்கு இதையெல்லாம் உணர வேண்டும்?” என்று தான் யோசித்ததுண்டு என நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.அடிப்படையாக, தான் ஒரு ‘நல்ல கலைஞன்’ அல்ல என்றும், ஒரு கதாபாத்திரத்தில் முழுமையாக மூழ்கி, தன்னை மறந்து நடித்தது என்று ஒருபோதும் கூறியதில்லை என்றும் ரஜினி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். “நான் நடிக்கிறேன், அது பணத்திற்காக, அந்த கதாபாத்திரத்திற்காக. அந்தக் கலையில் முழுமையான ஈடுபாடு, அது போன்ற விஷயங்கள் எனக்குத் தெரியாது” என்று அவர் கூறியுள்ளார்.’தளபதி’ படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும், ஒரு கட்டத்தில் மணிரத்னத்திடம், “சார், நீங்கள் நடித்துக் காட்டுங்கள், நான் அப்படியே செய்கிறேன்” என்று கூறியதாகவும் ரஜினி நினைவு கூர்ந்தார். மணிரத்னத்தின் இயக்கம் மாறுபட்டதாக இருந்ததால், ரஜினி சிரமப்பட்டதாகவும், இது ஒரு தனித்துவமான அனுபவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன