சினிமா
காலமானார் உலக அழகிப் பட்டம் வென்ற Black மாடல்.!– பேஷன் உலகத்தையே உலுக்கிய சோகம்.!

காலமானார் உலக அழகிப் பட்டம் வென்ற Black மாடல்.!– பேஷன் உலகத்தையே உலுக்கிய சோகம்.!
உலக அழகிப் பட்டத்தை கண்ணாக கொண்டு, இந்தியாவுக்கே பெருமை சேர்த்த மாடல் சான் ரேச்சல், இன்று உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பல தன்னம்பிக்கைக்குரிய பேச்சுகள், பேஷன் ஷோக்கள், சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்திய உரைகள்… இவை அனைத்தையும் தாண்டி, “தன்னம்பிக்கையின் சிலை” எனக் குறிப்பிடப்பட்ட சான் ரேச்சல் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது சினிமா, பேஷன் மற்றும் சமூக வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.புதுச்சேரியை சேர்ந்த சான் ரேச்சல் (வயது 26), கடந்த சில ஆண்டுகளாக பேஷன் ஷோ நடத்தும் நிறுவனம் ஒன்றை நிறுவி அதன் மூலம் பல இளம் மாடல்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்.ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு பெரிய பேஷன் நிகழ்வில் ஏற்பட்ட நஷ்டம், கடன் சுமைகள், அழுத்தம் ஆகியவை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகியதாலேயே மரணித்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.