இலங்கை
கொழும்பில் தீ விபத்து ; பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பில் தீ விபத்து ; பொலிஸார் தீவிர விசாரணை
தெமட்டகொடா பகுதியில் அமைந்துள்ள ஒரு குப்பை மேடில் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை எந்தவொரு உயிரிழப்போ, காயம்பட்டவர்களோ தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
தீ விபத்தின் காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.