சினிமா
சிவராஜ் குமாரின் வாழ்க்கை சம்பவத்தை படமாக எடுக்கும் முயற்சி.! வெளியான அப்டேட் இதோ.!

சிவராஜ் குமாரின் வாழ்க்கை சம்பவத்தை படமாக எடுக்கும் முயற்சி.! வெளியான அப்டேட் இதோ.!
சண்டைக் காட்சிகளில் விறுவிறுப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சிவராஜ்குமார். இவர் தனது வாழ்க்கையை பாதித்த புற்றுநோயிலிருந்து மீண்டது குறித்து தற்போது ஒரு உணர்ச்சிபூர்வமான ஆவணப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த ஆவணப்படத்தை ‘SURVIVOR’ என்ற பெயரில் உருவாக்குவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இது அவரது வாழ்க்கையின் துணிச்சலான கட்டங்களை வெளிக்கொணரும் ஒரு முக்கியமான முயற்சி எனவும் கருதப்படுகிறது.ஆவணப்படத்தின் தலைப்பு ‘SURVIVOR’ என்பதைக் கேட்டதும் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது. மேலும், ‘SURVIVOR’ ஆவணப்படத்தின் post-production வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.