Connect with us

இலங்கை

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் இராணுவத்தினருடையதாம் : புது கதையை வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ச!

Published

on

Loading

செம்மணியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் இராணுவத்தினருடையதாம் : புது கதையை வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்ச!

செம்மணி மனிதபுதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தமிழர்கள் தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார். 

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று தமிழர்கள் எண்ணுகின்றார்கள்? அதனால் எந்தப் பயனும் கிடைக்காது. முதலில்  அந்த மனித எலும்புக்கூடுகள் தமிழர்கள் தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இன்னமும் பரிசோதனை நடத்தாமல் அந்த மனித எலும்புக்கூடுகளை வைத்துத் தமிழ்த் தரப்பினர் அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர். 

நான் ஏற்கனவே தெரிவித்தது போல் போர் நடந்த மண்ணில் மனித எலும்புக்கூடுகள் வெளிக்கிளம்பும் என்பது உண்மை. அதேவேளை, போர் நடந்த வடக்கு மண்ணில் தமிழர்கள் மாத்திரம் உயிரிழக்கவில்லை. அங்கு இராணுவத்தினரும் இறந்தார்கள், சிங்கள, முஸ்லிம் மக்களும் இறந்தார்கள்.

போரில் இறந்த தமது உறவுகளின் எலும்புக்கூடுகளை வைத்து அரசியல் நடத்தும் தேவை சிங்கள – பௌத்தர்களுக்குக் கிடையாது. ஆனால், யார் என்றே உறுதிப்படுத்தாத எலும்புக்கூடுகளை வைத்துத் தமிழர்கள் கேவலமான முறையில் அரசியல் நடத்துகின்றார்கள்.

Advertisement

இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த தமிழர்கள் விரும்புகின்றார்களா? – என்று போர் காலகட்டத்தை மீளவும் நினைவுபடுத்தி எச்சரித்துள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன