தொழில்நுட்பம்
ஜியோவில் இனி அனைவருக்கும் வி.ஐ.பி. நம்பர்கள்: லக்கி நம்பரை இனி நீங்களே தேர்வு செய்யலாம்!

ஜியோவில் இனி அனைவருக்கும் வி.ஐ.பி. நம்பர்கள்: லக்கி நம்பரை இனி நீங்களே தேர்வு செய்யலாம்!
இனி ஜியோ பயனர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தனிப்பயனாக்கப்பட்ட மொபைல் எண்களைத் தாங்களே தேர்வு செய்துகொள்ள முடியும். இதன்மூலம் மிகக் குறைந்த விலையில் மொபைல் எண்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சேவை, “ஜியோ சாய்ஸ் நம்பர்” (அ) “ஃபேன்சி நம்பர்” என்றழைக்கப்படுகிறது.என்னென்ன எண்களைத் தேர்வு செய்யலாம்?நீங்கள் விஐபி நம்பர், அதிர்ஷ்ட எண், பிறந்த தேதி, திருமண நாள், வாகனப் பதிவு எண் அல்லது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய எண்களைத் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட வரிசை எண்கள், திரும்பத் திரும்ப வரும் எண்கள் அல்லது தனிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த எண்கள் என உங்கள் விருப்பப்படி எண்ணை அமைத்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது. முன் இந்த சேவைக்கு ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜியோ அதை ரூ.50 என்ற அதிரடிச் சலுகை விலையில் வழங்குகிறது. இது பல பயனர்களுக்கு, தங்களுக்குப் பிடித்த எண்ணைப் பெறுவதை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் நீங்கள் பயன்படுத்தி வரும் மொபைல் நம்பர், வாகன பதிவு எண், பிறந்த நாள் அல்லது அதிர்ஷ்ட எண்ணைப் போன்ற மொபைல் எண்ணை பெற்றுக் கொள்ளலாம்.எப்படித் தேர்வு செய்வது?உங்கள் விருப்பமான ஜியோ மொபைல் எண்ணைத் தேர்வு செய்ய 3 எளிய வழிகள் உள்ளன:மை ஜியோ ஆப் (MyJio App)உங்கள் ஸ்மார்ட்போனில் மை ஜியோ ஆப்பை டவுன்லோட் செய்யவும். ஆப் மெனுவில், ‘Fancy Number’ (அ) ‘Choice Number’ பகுதியை கண்டறியவும். உங்கள் விருப்பமான இலக்கங்களை (4 முதல் 6 இலக்கங்கள் வரை) உள்ளிட்டு, கிடைக்கக்கூடிய எண்களைத் தேடவும். பட்டியலிலிருந்து உங்களுக்குப் பிடித்தமான எண்ணைத் தேர்வு செய்து, தேவையான கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்யவும்.ஜியோ இணையதளம் (Jio.com)ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான jio.com க்குச் செல்லவும். ‘Choice Number’ பிரிவைத் தேர்வு செய்யவும். உங்கள் பெயர், பின்கோடு மற்றும் விரும்பிய இலக்கங்களை உள்ளிடவும். கிடைக்கக்கூடிய எண்களின் பட்டியலிலிருந்து தேர்வு செய்து, கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்யவும்.ஜியோ ஸ்டோர் அல்லது ரீடெய்லர்:அருகிலுள்ள ஜியோ ஸ்டோர் (அ) அங்கீகரிக்கப்பட்ட ஜியோ ரீடெய்லரை அணுகவும். அங்கு கிடைக்கும் ஃபேன்சி எண்களின் பட்டியலிலிருந்து உங்கள் விருப்பமான எண்ணைத் தேர்வு செய்யலாம். கே.ஒய்.சி. (KYC) செயல்முறையை நிறைவு செய்து, பொருந்தக்கூடிய கட்டணத்தைச் செலுத்தவும்.நீங்கள் புதிய ஜியோ சிம் கார்டைப் பெறும்போதோ அல்லது ஜியோ போஸ்ட்பெய்ட் பிளான் எடுக்கும்போதோ இந்த ‘சாய்ஸ் நம்பர்’ வசதியைப் பெறலாம். தேர்வு செய்யப்பட்ட சிம் கார்டை இலவசமாக வீட்டிலேயே டெலிவரி செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட எண்ணிற்கான கட்டணம் பொதுவாகத் திரும்பப் பெறப்படாது (non-refundable). இந்த சேவை, பயனர்களுக்குத் தனிப்பட்ட அடையாளத்தையும், எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய எண்களையும் பெற சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.