சினிமா
தெலுங்கு பக்கம் போக இதான் காரணம்!! சரத்குமார் மகள் வரலட்சுமிக்கே இந்த நிலைமையா?

தெலுங்கு பக்கம் போக இதான் காரணம்!! சரத்குமார் மகள் வரலட்சுமிக்கே இந்த நிலைமையா?
ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது.மிர்ச்சி விஜய், மணிமேகலை தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் பாபா மாஸ்டர், சினேகா, வரலட்சுமி போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். சில வாரமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமர் இருந்த வரலட்சுமி மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.நிக்கோலாயை திருமணம் செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டதே என்று கூறி திருமண வீடியோவை பகிர்ந்துள்ளார் வரலட்சுமி.இந்நிலையில், தமிழில் எனக்கு ரீச் ஆகமுடியவில்லை, அதனால் தான் தெலுங்குக்கு போய்ட்டேன். உண்மையில் சொல்லப்போனால் எனக்கு தமிழில் பெரியளவில் படம் பண்ணவில்லை, தெலுங்கில் எனக்கு மரியாதை கொடுத்து கூப்பிடுகிறார்கள், அதனால் அங்கு போகிறேன், தமிழில் கிடைச்சால் பண்ணுவேன் என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.