Connect with us

பொழுதுபோக்கு

நான் கமல், பிரபுதேவா இல்ல; என்னால ஆட முடியாது: பாட்ஷா படத்தில் லோக்கலா ஒரு பாட்டு கேட்ட ரஜினி!

Published

on

Rajinikanth Deva

Loading

நான் கமல், பிரபுதேவா இல்ல; என்னால ஆட முடியாது: பாட்ஷா படத்தில் லோக்கலா ஒரு பாட்டு கேட்ட ரஜினி!

ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘பாட்ஷா’வில் இடம்பெற்ற ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ பாடல் உருவான விதம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இசையமைப்பாளர் தேவா பகிர்ந்துள்ளார்.ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘பாட்ஷா’வின் வெற்றிக்கு தேவா மிக முக்கியப் பங்காற்றினார். 1995-ல் வெளியான இந்தப் படத்தில் அவரது இசை, படத்தின் அதிரடியான கதைக்களத்திற்கு உயிர் ஊட்டியதுடன், ரஜினியின் பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது.தேவாவின் இசையமைப்பு பாட்ஷாவின் அனைத்துப் பாடல்களையும் மெகா ஹிட்டாக்கின. குறிப்பாக, ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’, ‘நம்பர் ஒன் நம்பர் ஒன்’, மற்றும் ‘நான் ஆட்டோக்காரன்’ போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகின்றன. இந்நிலையில் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் தேவா பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் வேறு மெட்டும், வரிகளும் உருவாக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் ஒரு ‘லோக்கல்’ பாடலை விரும்பியதே இந்த ஹிட் பாடலின் பிறப்புக்குக் காரணம் என்று தேவா கூறியது தமிழ்நாடு நௌ யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தேவா ஆரம்பத்தில் ‘நான் என்ன வந்தேண்டா பால்காரன்’ போன்ற ஒரு லோக்கல் பாடல் வேண்டாம் என நினைத்து, சற்று நவீனமான ‘ஆட்டோ ஆட்டோ சூப்பர் ஆட்டோ’ என்ற மெட்டை உருவாக்கினார். ஆனால், ரஜினிகாந்த் இந்த மெட்டைக் கேட்டதும், “நான் பிரபுதேவா, கமல் இல்லை; இதுக்கெல்லாம் என்னால் ஆட முடியாது சார். லோக்கலா ஒரு பாட்டு போடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.ரஜினியின் இந்த வார்த்தைகளே புதிய உத்வேகத்தைக் கொடுத்ததாக தேவா தெரிவித்தார். இசையமைப்பாளர்  தேவா, பாடலை கம்போஸ் செய்யும் போது தானே டூப்ளிகேட் வரிகளைப் போட்டுள்ளார்.அப்படி அவர் போட்ட டூப்ளிகேட் வரிதான், “ஏ கப்பல் பாரு கப்பல் பாரு கப்பல் மேல டோரா பாரு டோரா கீழ ஆயா பாரு ஆயா கையில குழந்தை பாரு குழந்தை வாயில பழத்தை பாரு பழத்துக்குள்ள புழுவை பாரு புழு நெத்தில பொட்டு பாருடா.” இதுதான் ‘ஆட்டோக்காரன்’ பாடலின் ஆரம்ப வடிவம் என்றார்.இந்த மெட்டைக் கேட்ட ரஜினி ‘சூப்பர் சூப்பர்’ என்று பாராட்டினாலும், பாடலுக்கும் ‘ஆட்டோக்காரன்’ தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதால், கவிப்பேரரசு வைரமுத்துவை அணுக முடிவு செய்தனர். வைரமுத்து அவர்கள் ஸ்டுடியோவிற்கு வந்து, ஐந்தே நிமிடங்களில் அந்தப் பல்லவியை எழுதி கொடுத்ததாகவும் தெரிவித்தார். வைரமுத்து வரிகளை எழுதிய பிறகு, இசையமைப்பாளர் தேவா, ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர்கள் முன்னிலையில் பாடி காண்பித்தார். இறுதியாக, காலத்தால் அழியாத அந்தப் பாடலை மறைந்த மாபெரும் பாடகர் எஸ்.பி.பி. (எஸ்.பி. பாலசுப்ரமணியம்) தனது கம்பீரமான குரலில் பாடினார். ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ பாடல் எஸ்.பி.பி.யின் குரலில் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம்பிடித்தது.’பாட்ஷா’ திரைப்படம் ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியதுடன், தமிழ் சினிமாவின் அதிரடி திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன