Connect with us

பொழுதுபோக்கு

பஞ்ச தந்திரம், தெனாலி மாதிரி வர வேண்டியது; மிஸ் ஆகிடுச்சு: கே.எஸ் ரவிக்குமார் சொல்வது எந்த படம்?

Published

on

KSR and Kamal

Loading

பஞ்ச தந்திரம், தெனாலி மாதிரி வர வேண்டியது; மிஸ் ஆகிடுச்சு: கே.எஸ் ரவிக்குமார் சொல்வது எந்த படம்?

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநர்கள் பட்டியலில் நிச்சயம் கே.எஸ். ரவிக்குமார் முதன்மையான இடத்தை பெறுவார். ‘புரியாத புதிர்’ திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம், ‘படையப்பா’, ‘முத்து’, ‘தெனாலி’, ‘தசாவதாரம்’ என்று ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொண்டுள்ளது.அதிலும், தமிழின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை கொண்டு ஒரே நேரத்தில் படம் இயக்கிய பெருமை கே.எஸ். ரவிக்குமாருக்கு உள்ளது. இவரது ‘நாட்டாமை’, ‘நட்புக்காக’ உள்ளிட்ட திரைப்படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் வெற்றி பெற்றன. அஜித், விஜய், சிம்பு என அடுத்த தலைமுறை டாப் ஹீரோக்களுடனும் கே.எஸ். ரவிக்குமாரின் வெற்றிப் பயணம் தொடர்ந்து முன்னேறியது.இத்தனை படங்கள் ஹிட்டாகி இருந்தாலும், அவரது திரைப்பயணத்தில் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெற்றிருக்காது. அந்த வகையில், ‘மன்மதன் அன்பு’ திரைப்படம் குறித்து தனது கருத்துகளை கே.எஸ். ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, “நான் இயக்கிய முதல் காதல் திரைப்படமே ‘மன்மதன் அன்பு’ தான். அப்படம் தான் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி நான் இயக்கியது. அப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவை கமல்ஹாசனுடையது.அப்படத்தின் க்ளைமேக்ஸை தவிர மற்ற அனைத்தும் இன்றைக்கும் கூட ரசிக்கும் வகையில் இருப்பதாக பலர் கூறுகின்றனர். க்ளைமேக்ஸ் மட்டும் அப்படத்திற்கு பொருத்தமாக இல்லை. மற்றபடி, நல்ல நகைச்சுவையும் அப்படத்தில் இருந்தது.’பஞ்ச தந்திரம், ‘தெனாலி’ போன்ற படங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்க வேண்டிய திரைப்படம் ‘மன்மதன் அம்பு’. ஆனால், கொஞ்சம் மிஸ்ஸாகி விட்டது” என கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தொடக்கம் முதல் முடிவு வரை முற்றிலும் ஒரு திரைப்படம் சரியாக இருந்தால் மட்டுமே, ரசிகர்களை கவர முடியும் என்று இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.K.S.Ravikumar about Manmadhan Ambu ❤️🎬📽️ #manmadhanambu #ksravikumar #kamalhaasan #trisha #trishakrishnan #kamal #madhavan

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன