Connect with us

இலங்கை

பல்கலைக்கழக வளாகம் பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

Published

on

Loading

பல்கலைக்கழக வளாகம் பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

நாட்டின் பல்கலைக்கழக அமைப்பிற்குள் நீண்ட காலமாக பகிடிவதை சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், பல்கலைக்கழக நிர்வாகமும் ஊழியர்களும் அமைதி காத்து வந்துள்ளதாக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

நாட்டில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க போதுமான சட்டங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், பல்கலைக்கழக அதிகாரிகளின் மந்தமான நடவடிக்கைகளால் பகிடிவதையை ஒழிக்க முடியவில்லை என்று சட்டத்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

RAG… இல்லையென்றால், இந்த பகிடிவதை உலகிற்குப் புதியதல்ல.

வரலாற்றின் படி, RAG என்ற வார்த்தை ROYAL ADMISSION GAME என்ற வார்த்தையிலிருந்து வந்தது.

RAG என்பது பிரிட்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் நுழையும் போது அரச குடும்பங்களின் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் ஒரு விளையாட்டு.

Advertisement

அரச குடும்பங்களின் பிள்ளைகளுக்கு சமத்துவத்தையும் ஒற்றுமையையும் கற்பிப்பதே இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.

சமத்துவத்தை முதன்மை மையமாகக் கொண்டு தொடங்கிய இந்த பகிடிவதை, 1940களில் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஒரு துணைக் கலாச்சாரமாக மாறியது.

ஆனால் இப்போது அது ஒரு சமூக துயரமாக மாறிவிட்டது.

Advertisement

அரசியல், பாலியல் பொறாமை, சமூக வர்க்கப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பாசாங்குத்தனம் போன்ற மனநிலைகளில் இந்த துணை கலாச்சாரம் ஊடுருவுவதே இதற்குக் காரணம்.

இந்த வழியில் மாற்றம் பெற்ற பகிடிவதையானது மிகவும் கொடூரமாக மாறி, மற்றொரு நபரின் உயிரைப் பறித்துவிட்டது.

பல்கலைக்கழகக் கனவை நோக்கி வந்த மாணவர்கள் பகிடிவதை சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, அவர்களின் கனவுகள் கண் இமைக்கும் நேரத்தில் அழிக்கப்பட்ட சம்பவங்கள் இந்த நாட்டில் பல உள்ளன.

Advertisement

1977 ஆம் ஆண்டு, பேராதனைப் பல்கலைக்கழக மாணவி ரூபா ரத்னசீலி ராமநாதன், விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்தார், பின்னர் தனது சிரேஷ்ட மாணவர்களின் கொடூரமான பகிடிவதையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

1997 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த எஸ்.வரபிரகாஷ், பகிடிவதையால் சிறுநீரக செயலிழப்புக்கும் உள்ளானார்.

அதே ஆண்டில், அம்பாறையில் உள்ள ஹார்டி தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவரான கெலும் துஷாராவும் அதே சம்பவத்தின் காரணமாக இறந்தார்.

Advertisement

மிகக் கடுமையான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டியதாலும், அளவுக்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதாலும் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தாக கூறப்படுகிறது.

இந்த நாட்டில் 2002 ஆம் ஆண்டு மிகவும் கொடூரமான பகிடிவதை சம்பவம் பதிவாகியுள்ளது.

அதுதான் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை எதிர்த்ததற்காக ஓ.வி.சமந்தவின் கொலை.

Advertisement

23 வருடங்கள் கடந்துவிட்டாலும், சமந்தாவின் தாயார் அந்த சம்பவத்தால் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

அந்த விரும்பத்தகாத அனுபவத்தையும் அவர் தனது புத்தகத்தில் விபரித்திருக்கிறார்.

சமந்தவின் இறுதிச் சடங்கின் போது அப்போதைய நிர்வாகிகள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, பகிடிவதை கொடுமை பல்கலைக்கழகங்களிலிருந்து ஒழிக்கப்படும் என்பதாகும்.

Advertisement

எனவே அவர்கள் தெரிவித்த விடயம் அன்று நடந்திருந்தால், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சரித் தில்ஷானைப் பற்றி நாம் பேசவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

குற்றப் புலனாய்வு பிரிவினரின் ஆரம்ப விசாரணைகளில், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சரித், பகிடிவதையின் அதிர்ச்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

சரித்தின் கதையின் சூடு தணிவதற்குள், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த புதிய பகிடிவதை சம்பவத்துடன் சமூக ஊடகங்களில் மீண்டும் இது பேசும் பொருளாக மாறியது.

Advertisement

பல்கலைக்கழக அதிகாரிகள் ரூபா ரத்னசீலியின் சம்பவத்தின் ஊடாக பாடம் கற்றுக்கொண்டிருந்தால், வரபிரகாஷ் இறந்திருக்க மாட்டார்.

அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டிருந்தால் கெலும் துஷார இறந்திருக்க மாட்டார்.

அதன் பிறகு, சமந்தவும் சரித்தும் இறந்திருக்க மாட்டார்கள்.

Advertisement

உலகம் முழுவதிலுமிருந்து பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களிடையே சமத்துவத்தையும் ஒற்றுமையையும் உருவாக்க பகிடிவதை என்ற துணை கலாச்சாரம், அந்த வேலையைச் செய்வதற்குப் பதிலாக, கல்வி உரிமையைப் பறிக்கும் ஒரு நிலையை அடைந்து,

மற்றவர்களின் உயிரைக் கூட பறிக்கும் நிலையை அடைந்திருந்தால், எதிர்காலத்தில் மேலும் பல சமந்த மற்றும் சரித் பற்றி நாம் அதிகம் கேட்க வேண்டியிருக்கும்.

இது நடக்காமல் பார்த்துக் கொள்வது ஒரு தேசிய பொறுப்பு என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன