Connect with us

பொழுதுபோக்கு

பள்ளிக்கூடம் படத்தில் இளம் சினேகா; ரஜினியுடன் நடித்த இந்த நடிகையா? ரோமியோ ஜூலியட் ஹன்சிகா தோழி!

Published

on

shreya Gupto

Loading

பள்ளிக்கூடம் படத்தில் இளம் சினேகா; ரஜினியுடன் நடித்த இந்த நடிகையா? ரோமியோ ஜூலியட் ஹன்சிகா தோழி!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்தரமாக நடித்த பல நடிகர் நடிகைகள், வளர்ந்து ஒரு படத்தில் ஹீரோயின் அல்லது முக்கிய கேரக்டரில் நடிக்கும்போது அவரா இவர்? அந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர், என்ற ஆச்சரியம் ஏற்படும். அந்த வகையில் பள்ளிக்கூடம் படத்தில் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரம், ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்திருப்பது பலரும் அறியாத ஒரு தகவல்.90-எஸ் குழந்தைகளின் பள்ளி பருவத்தை நினைவில் கொண்டு வரும் முக்கிய படங்களில் ஒன்று தான் பள்ளிக்கூடம். இன்றைக்கும் இந்த படத்தின் ப்ளாஷ்பேக் காட்சிக்கு 90 எஸ் குழந்தைகள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் தங்கர் பச்சன். தனது களவாடிய பொழுதுகள் புத்தகத்தில் இருந்து இந்த படத்திற்கான திரைக்கதையை அமைத்திருப்பார்.அதேபோல், நரேன், சினேகா, சீமான் ஆகியோருடன், முக்கிய கேரக்டரில் தங்கர் பச்சனே நடித்திருப்பார். ஸ்ரேயா ரெட்டி இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். பள்ளிக்கூடம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தின் ப்ளாஷ்பேக் காட்சி இன்றைக்கும் ஃபேவரெட்டாக உள்ளது. ப்ளாஷ்பேக்கில், நரேன், சினேகா, சீமான், தங்கர் பச்சன் ஆகியோரின் இளம் வயது கேரக்டரில் நடித்தவர்கள் அதிக கவனம் ஈர்த்துள்ளனர்.A post shared by Shreya Gupto (@shreyaguptoo)அந்த வகையில் சினேகா நடித்த கோகிலா கேரக்டரில் இளம் வயது கோகிலாவாக நடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா குப்தோ. பள்ளிக்கூடம் படத்தில் தனது குறும்புத்தனமாக ரியாக்ஷன் மூலம் கவனம் ஈர்த்த இந்த நடிகை, அடுத்து, 2008-ம் ஆண்டு சூர்யாவின் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பிறகு, 2014-ம் ஆண்டு ஜூலி என்ற ஷாட்ஃபிலிமில் நடித்த ஸ்ரேயா குப்தோ 2015-ம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் திரைப்படத்தில் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியாக நடித்தார்.அதன்பிறகு ரஜினியுடன் தர்பார் திரைபடத்தில் நடித்திருந்த இவர், சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் திரைப்படத்தில் மருத்துவ மாணவியாக நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ரேயா குப்தோ அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன