பொழுதுபோக்கு
மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும்: ‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குனர் கோவையில் பேச்சு

மிஷ்கினின் பெருந்தன்மை திரையில் தெரியும்: ‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குனர் கோவையில் பேச்சு
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் டி-கம்பெனி இணைந்து தயாரித்துள்ள ஓஹோ எந்தன் பேபி திரைப்பட குழுவினர் கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட்வே சினிமாஸ் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.தமிழ் சினிமாவில் , த்ரில்லர், வயலன்ஸ், போன்ற சீரியசான படங்களே வரும் போது ஒரு ஜாலியான படமாக இருக்கட்டுமே என ஓஹோ எந்தன் பேபி படத்தை இயக்கி உள்ளதாகவும் முழுக்க ஜாலியான படமாக இயக்கி உள்ளதாக தெரிவித்த இயக்குநர் கிருஷ்ணகுமார் இது நண்பர்கள் கூட்டத்திற்கான படம் என்றார்.இயக்குனர் மிஷ்கின் குறித்து பேசிய அவர் அவரது பெருந்தன்மை திரையில் தெரியும் என கூறினார். படங்கள் ஹிட்டாவது பட்ஜெட்டில் இல்லை என கூறிய இயக்குனர் ரசிகர்களுக்கு படம் கனெக்ட் ஆகி விட்டால் லோ பட்ஜெட், ஹை பட்ஜெட் என்ற வித்தியாசமில்லாமல் படம் ஓடி விடும் என கூறினார்.படத்தின் நாயகனும்,விஷ்ணு விஷாலின் தம்பியுமான ருத்ரா பேசுகையில் ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற படத்தில் நடிப்பதற்கு முன்னரே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் தர்பார் படத்தில் பணியாற்றி உள்ளதாகவும் இருந்த போதும் கேமராவின் முன் நடிக்கும் போது சிறிய ஒரு டென்ஷன் இருந்ததாக கூறினார்.தனது அண்ணன் உடன் நடித்த போது அவரின் அறிவுரையை கேட்டு படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அவர் பேசினார்.பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்