இலங்கை
வாகன விபத்தில் பாதசாரி பலி ; சந்தேகநபர் தப்பியோட்டம் !

வாகன விபத்தில் பாதசாரி பலி ; சந்தேகநபர் தப்பியோட்டம் !
அநுராதபுரம் மரதன்கடவல பொலிஸ் பிரிவில் உள்ள ஏ -11 வீதியில் உள்ள மாமினிய வெவ அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன விபத்தில் உயிரிழந்த நபர் மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கணேவல்பொல திசையில் இருந்து மரதன்கடவல நோக்கி நடந்து சென்ற ஒருவர் மீது வாகனம் மோதிய நிலையில்,படுகாயமடைந்த நபர் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்போது, குறித்த நபர் மீது வாகனத்தில் மோதி சந்தேகநபர் வாகனத்தோடு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், விபத்துடன் தொடர்புடைய வாகனம் மற்றும் சாரதியை கைது செய்ய மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.