Connect with us

சினிமா

வெற்றிமாறன் படத்திற்காக 10 கிலோ எடையை குறைத்த சிம்பு.! – புதிய லுக்கில் களமிறங்கும் STR…

Published

on

Loading

வெற்றிமாறன் படத்திற்காக 10 கிலோ எடையை குறைத்த சிம்பு.! – புதிய லுக்கில் களமிறங்கும் STR…

“மாநாடு”, “வெந்து தணிந்தது காடு” போன்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகர் சிலம்பரசன், தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்திற்காக தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்துள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.இந்த தகவல் அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. “ஸ்டார் மீண்டும் magic செய்யப் போறாரு..!” என்ற நம்பிக்கையை இந்த உடல் மாற்றம் பலமாக்கியுள்ளது.தமிழ் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறனின் படங்களுக்கு தனி மார்க்கெட் உள்ளது. கதையமைப்பில் உண்மையையும், சமூக உணர்வையும் பேணும் படங்களை இவர் உருவாக்குவது வழக்கம். அத்தகைய படங்களில் நடிகர்கள் தங்கள் உடல் அமைப்பை மாற்றிக் கொள்வதும் வழக்கம்.இந்நிலையில், வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் படம் என தெரியவந்ததிலிருந்து, இந்தக் கூட்டணிக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தற்போது சிம்பு, அந்தப் படத்திற்காக தனது உடலை முற்றிலும் மாற்றியமைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன