சினிமா
நயன்தாராவை ஓவர்டேக் பண்ணிடாதீங்கம்மா..! பிரணிதாவின் லுக்கை பார்த்து பதறிய ரசிகர்கள்..

நயன்தாராவை ஓவர்டேக் பண்ணிடாதீங்கம்மா..! பிரணிதாவின் லுக்கை பார்த்து பதறிய ரசிகர்கள்..
தமிழ், ஹிந்தி உள்ளிட்ட திரையுலகில் தன் அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரணிதா சுபாஷ், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புதிய புகைப்படங்களால் மீண்டும் சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் வைரலாகி வருகின்றார்.வெள்ளை நிற ஆடை, நேர்த்தியான மேக்கப், கண்ணைப் பறிக்கும் அழகு இவற்றுடன் ஒரு மாடர்ன் கிளாசிக் லுக்கில் பளிச்சென மின்னும் இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளன.பிரணிதா சுபாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த சமீபத்திய புகைப்படங்கள் ஒரு புரபெஷனல் photoshoot போல தெரிகிறது. வெள்ளை நிற ஆடையை ஸ்டைலாக அணிந்துள்ள இவரைப் பார்த்த ரசிகர்கள், “வெள்ளை நிற ஆடையில் தேவதை போல இருக்கிறார்…!” என கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.