இலங்கை
இந்தியாவுக்கு லார்ட்ஸில் அதிர்ச்சி தோல்வி ; 22 ஓட்டங்களால் வென்ற இங்கிலாந்து

இந்தியாவுக்கு லார்ட்ஸில் அதிர்ச்சி தோல்வி ; 22 ஓட்டங்களால் வென்ற இங்கிலாந்து
இலண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ஓட்டங்களால் திரிலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியுடன், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் : 387 ஓட்டங்கள் (112.3 ஓவர்கள்; ஜோ ரூட் 104, ப்ரைடன் கார்ஸ் 56, ஜாமி ஸ்மித் 51; ஜஸ்ப்ரீத் பும்ரா 5-74)
இந்தியா முதல் இன்னிங்ஸ் : 387 ஓட்டங்கள் (119.2 ஓவர்கள்; கே.எல்.ராகுல் 100, ரிஷப் பந்த் 74; கிறிஸ் வோக்ஸ் 3-84)
இங்கிலாந்து
இரண்டாவது இன்னிங்ஸ் : 192 ஓட்டங்கள் (62.1 ஓவர்கள்; ஜோ ரூட் 44; வாஷிங்டன் சுந்தர் 4-22)
இந்தியா
இரண்டாவது இன்னிங்ஸ் : 170 ஓட்டங்கள் (71.2 ஓவர்கள்; ரவீந்திர ஜடேஜா 61*, கே.எல்.ராகுல் 33; பென் ஸ்டோக்ஸ் 3-36, ஜோஃப்ரா ஆர்ச்சர் 3-38)
இந்தியாவுக்கு 193 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நான்காவது நாள் முடிவில் இந்தியா 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
ஐந்தாவது நாளில், ஜடேஜா (61* – 181 பந்துகள்) மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ராவின் (20) கூட்டணி இந்தியாவை 22 ஓட்டங்கள் அருகே கொண்டு சென்றது.
ஆனால், ஷோயப் பஷீர் முகமது சிராஜை (04) ஆட்டமிழக்கச் செய்து இங்கிலாந்துக்கு வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்காற்றினர்.
பஷீர் காயமடைந்த கையுடன் விளையாடியி இருந்தமை குறிப்பிடத்தக்கது.