Connect with us

பொழுதுபோக்கு

என்னை பிரபலம் ஆக்கிய டைலாக்; எனக்கு இந்த கேரக்டர் தான் பிடிக்கும்; ரகுவரன் த்ரோபேக் வீடியோ!

Published

on

Raghuvaran Classic

Loading

என்னை பிரபலம் ஆக்கிய டைலாக்; எனக்கு இந்த கேரக்டர் தான் பிடிக்கும்; ரகுவரன் த்ரோபேக் வீடியோ!

நடிகர் ரகுவரன், தன்னை மிகவும் பிரபலமாக்கிய ஒரு கதாபாத்திரம் குறித்து பழைய நேர்காணல் ஒன்றில் கூறியது, இப்போது ட்ரெண்டாகி வருகிறது.இந்திய திரைப்பட உலகில், குறிப்பாக தென்னிந்தியத் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த ஒரு கலைஞராக ரகுவரன் திகழ்ந்தார். 200-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த இவர், தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் குரலால் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருந்தார்.சென்னை எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் நடிப்பு டிப்ளோமா படித்த ரகுவரன், ஹரிஹரன் இயக்கிய ‘ஏழாவது மனிதன்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அந்தப் படம் பல விருதுகளை வென்றாலும், அவருக்கு அதிகம் பட வாய்ப்புகளை பெற்றுத்தரவில்லை. ‘ஒரு ஓடை நதியாகிறது’, ‘நீ தொடும்போது’ போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், அவை வெற்றியடையவில்லை.ஆனால், ‘சில்க் சில்க் சில்க்’ படத்தில் ரகுவரன் ஏற்ற வில்லன் கதாபாத்திரம் கவனிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வெற்றி, அவருக்கு பல வாய்ப்புகளின் கதவுகளைத் திறந்தது. ‘குற்றவாளிகள்’, ‘மந்திரப் புன்னகை’, ‘பூவிழி வாசலிலே’, ‘மக்கள் என் பக்கம்’, ‘புரியாத புதிர்’ போன்ற படங்களில் தொடர்ந்து கலக்கினார். அதிலும், ‘புரியாத புதிர்’ படத்தில் இடம்பெற்ற இவரது ‘I know’ வசனத்தை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.திரையுலகில் பல பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளில் வில்லனாக பங்களித்த ரகுவரன், தமிழ் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். அவருடைய மறக்க முடியாத கதாபாத்திரங்கள், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தவை தான். ‘மிஸ்டர். பாரத்’ , ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘சிவா’, ‘ராஜா சின்ன ரோஜா’ , ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாச்சலம்’ மற்றும் ‘சிவாஜி’ போன்ற படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர்.இப்படி எத்தனையோ படங்கள் இருந்தாலும் தன்னை பிரபலமாக்கிய கதாபாத்திரமாக ‘பாட்ஷா’ திரைப்படத்தில், தான் ஏற்று நடித்த மார்க் ஆண்டனி பாத்திரத்தை ரகுவரன் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நடிகை அனு ஹாசனுடனான ஒரு பழைய நேர்காணலில், மார்க் ஆண்டனி கதாபாத்திரம் தன்னை பிரபலப்படுத்தியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன