இலங்கை
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சுஜீவ சேனசிங்க வாக்குமூலம்!

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சுஜீவ சேனசிங்க வாக்குமூலம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (14) காலை முன்னிலையாகியுள்ளார்.
சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சுஜீவ சேனசிங்கவிடமிருந்து 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் சுஜீவ சேனசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.