Connect with us

பொழுதுபோக்கு

குருவே அந்த பக்கம் தள்ளிப்போங்க… அனிருத்தை ஓரம் கட்டிய அபயங்கர்; 6 மாதத்தில் அசத்திய பாட்டு!

Published

on

Sai and Ani

Loading

குருவே அந்த பக்கம் தள்ளிப்போங்க… அனிருத்தை ஓரம் கட்டிய அபயங்கர்; 6 மாதத்தில் அசத்திய பாட்டு!

தமிழ் சினிமாவை பொறுத்த வரை, இசையமைப்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப புதிய இசையமைப்பாளர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்.இந்தப் பட்டியலில் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், எஸ்.ஏ. ராஜ்குமார், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுகின்றன. அதிலும், இதில் இளையராஜாவின் பங்களிப்பு தற்போது வரை சினிமா உலகிற்கு கிடைக்கிறது.இந்த சூழலில், இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பும் இசையமைப்பாளராக அனிருத் திகழ்ந்தார். குறிப்பாக,  ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ பொன்ற படங்களின் வெற்றிக்கு அனிருத்தின் இசை பெரும் பலமாக இருந்தது என்று கூறினால் ஆச்சரியமில்லை.அந்த அளவிற்கு இளைஞர்களின் பல்ஸ் அறிந்து இசையமைக்கும் ஆற்றல் அனிருத்துக்கு இருக்கிறது. ஆனால், தற்போது பல்வேறு திரைப்படங்களில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகி வருவது பலருக்கு ஆச்சரியமளிக்கிறது.ஏனெனில், லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் ‘பென்ஸ்’, சூர்யாவின் ‘கருப்பு’, பிரதீப் ரங்கநாதனின் ‘டூட்’, மலையாளத்தில் ‘பல்டி’, கார்த்தியின் 29-வது படமான ‘மார்ஷல்’, சிவகார்த்திகேயனின் 24-வது படம் ஆகியவற்றுக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.குறிப்பாக, ஒரு படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் இத்தனை படங்களுக்கான வாய்ப்பை சாய் அபயங்கர் பெற்றிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவரது ஆல்பம் பாடல்கள் என்று பலரும் கூறுகின்றனர்.இதற்கு ஏற்றார் போல், ஸ்பாட்டிஃபை (Spotify) செயலியில் கடந்த ஆறு மாதங்களில் அதிகமாக கேட்கப்பட்ட பாடல்கள் வரிசையில் சாய் அபயங்கரின் ‘சித்திர புத்திரி’ ஆல்பம் சாங் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பாடல் 3.45 கோடி ஸ்ட்ரீமிங்குடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.இதற்கு அடுத்த இடங்களில் சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘ரெட்ரோ’ படத்தில் இடம்பெற்ற ‘கனிமா’ பாடல் 3.24 கோடி ஸ்ட்ரீமிங்குடனும், அதே படத்தின் ‘கண்ணாடி பூவே’ பாடல் 3.36 கோடி ஸ்ட்ரீமிங்குடனும் இருக்கின்றன.இந்நிலையில், ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் அனிருத் இசையில் உருவான ‘பத்திக்கிச்சு’ பாடல் 2.65 கோடி ஸ்ட்ரீமிங்குடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் இடம்பிடித்த அனிருத்தின் ஒரே பாடல் இதுவாகும். இதன் மூலம் அனிருத்தை ஓரம் கட்டி சாய் அபயங்கர் முன்னேறி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன