Connect with us

பொழுதுபோக்கு

டெய்லி டி.வியில் வர… என்ன மாதிரியே நடக்கிற, நடிப்பை மாத்து: சின்னத்திரை நடிகருக்கு விஜய் போட்ட கண்டிஷன்!

Published

on

sanjeev and vijay

Loading

டெய்லி டி.வியில் வர… என்ன மாதிரியே நடக்கிற, நடிப்பை மாத்து: சின்னத்திரை நடிகருக்கு விஜய் போட்ட கண்டிஷன்!

சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் வெங்கட், நடிகர் விஜய்யுடனான தனது உறவு மற்றும் அவரது நடிப்பு பாணியில் விஜய் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது குறித்துப் பேசியுள்ளார். சஞ்சீவ், விஜய்யின் உடல்மொழி மற்றும் நடிப்பு முறையைத் தானும் அறியாமலேயே பின்பற்றுவதாக பிஹைன்வுட்ஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் சஞ்சீவ் வெங்கட் இருவரும் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படிக்கும்போதிருந்தே நல்ல நண்பர்கள். தற்போது வரை இருவரும் நட்பாக பழகி வருகின்றனர். சில படங்களிலும் விஜயோடு சஞ்சீவி வெங்கட் இணைந்து நடித்துள்ளார். சஞ்சீவ், விஜய்யுடன் சில திரைப்படங்களில் ஆரம்பகாலத்தில் இருந்தே நண்பர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பத்ரி, புதிய கீதை, மாஸ்டர் போன்ற படங்களில் விஜய்யின் நண்பராக சஞ்சீவ் நடித்துள்ளார். இதைத்தவிர சஞ்சீவ் சில சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய நடிப்பு குறித்து விஜய் கலாய்த்து பேசியதாக சஞ்சீவ் வெங்கட் கூறியுள்ளார். சஞ்சீவ் வெங்கட் நடிப்பில் விஜய்யின் தாக்கம் இருப்பதாக விஜய் அடிக்கடி அவரை கலாய்த்து பேசுவாராம். அதற்கு சஞ்சீவ், 25 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யுடன் பழகி வருவதால், அவரது உடல்மொழி, பேச்சு வழக்கங்கள், மற்றும் நடிப்பு பாணிகள் தன்னுள் இயல்பாகவே ஒட்டிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக, விஜய் இவரை பலமுறை கிண்டலாக கண்டித்துள்ளாராம். “டேய், நீ டெய்லி டிவியில் வர்ற. நீ நடிக்கிறது என்ன மாதிரியே நடிச்சிட்டு இருக்கிற. டயலாக் பேசும்போதும் அதே இடத்துல நிறுத்துற. அப்புறம் நான் உன்ன மாதிரி பண்றேனா, நீ என்ன மாதிரி பண்றேனான்னு எனக்கே சந்தேகம் வந்துரும். நான் ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டிதான் ஸ்க்ரீனில் வருவேன்” என்று விஜய் கூறியிருக்கிறார்.தான் வேண்டுமென்றே அவ்வாறு நடிப்பதில்லை என்றும், அது தனக்குள்ளேயே இருக்கும் பாதிப்பு என்றும் சஞ்சீவ் வெங்கட் விளக்கியுள்ளார். ஒரு மாமா இறந்து கிடக்கும் காட்சியில் அழும்போது, விஜய் மாதிரி அழ வேண்டும் என்று திட்டமிட்டு அழுவதில்லை என்றும், அது இயல்பாகவே வந்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.விஜய்யுடன் நீண்டகாலப் பழக்கம் காரணமாக இந்த பாதிப்பு என்றும் இது தவிர்க்க முடியாதது என சஞ்சீவ் வெங்கட்  தெரிவித்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன