இலங்கை
தென்னிலங்கையில் தொடரும் பதற்றம் ; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தென்னிலங்கையில் தொடரும் பதற்றம் ; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மீரிகம, ஏக்கர் 20 பகுதியில் உள்ள துரியன் (முள்நாறி) தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீரிகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட காவலாளி மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்