சினிமா
நிச்சயதார்த்தை முடித்த பிக்பாஸ் நடிகை ரித்விகா!! மாப்பிள்ளை யார் தெரியுமா?

நிச்சயதார்த்தை முடித்த பிக்பாஸ் நடிகை ரித்விகா!! மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்விகா, பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வரும் ரித்விகா, மெட்ராஸ் படத்தில் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.சமீபத்தில் ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளான ஜூலை 13 ஆம் தேதி ரித்விகா, நிச்சயதார்த்தத்தை முடித்திருக்கிறார்.தன்னுடைய வருங்கால கணவருடன் மோதிரம் மாற்றிய புகைப்படத்தை பகிர்ந்து நல்ல செய்தியை அறிவித்தார் ரித்விகா. ஆனால், வருங்கால கணவரின் முகத்தை சரியாக காட்டாமல் இருந்தார்.இந்நிலையில், ரித்விகா எங்கேஜ்மெண்ட் செய்தவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரித்விகாவின் நீண்டநாள் நண்பரான வினோத் லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது.ரித்விகாவின் நிச்சயதார்த்தம் சாதாரண முறையில் நடந்துள்ளது, விரைவில் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.