Connect with us

பொழுதுபோக்கு

நிஜமாவே வயிற்றில் உதைச்சாறு, கேரவன் போய் அழுதேன்; புதுப்பேட்டை அனுபவம் சொன்ன சினேகா!

Published

on

Pudhupettai sneha

Loading

நிஜமாவே வயிற்றில் உதைச்சாறு, கேரவன் போய் அழுதேன்; புதுப்பேட்டை அனுபவம் சொன்ன சினேகா!

தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களுக்கு பஞ்சமே கிடையாது என்று கூறலாம். அந்த அளவிற்கு ஏராளமான கேங்ஸ்டர் படங்களை முன்னணி இயக்குநர்கள் தொடங்கி, அறிமுக இயக்குநர்கள் வரை பலரும் எடுத்துள்ளனர்.குறிப்பாக, இது போன்ற படங்களின் தன்மையை நாயகன் திரைப்படம் மாற்றியது என்று கூறலாம். ஹாலிவுட்டில் காட்ஃபாதர் திரைப்படத்தின் தாக்கம் நாயகன் படத்தில் அதிகமாக இருந்தாலும், அதனை கச்சிதமாக தமிழுக்கு ஏற்றார் போல் மணிரத்னம் மாற்றி இருப்பார்.அதற்கு அடுத்தபடியாக கேங்ஸ்டர் படங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சினேகா நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படம் என்று கூறலாம். கதையின் காட்சி அமைப்பில் இருந்து வசனங்கள் வரை ஒரு நம்பகத் தன்மையை செல்வராகவன் கையாண்டிருப்பார்.இதன் காரணமாக, இன்று வரை புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சினேகா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.அதில், “புதுப்பேட்டை திரைப்படத்தில் நடிகர் பாலா சிங், என்னை உதைப்பது போன்ற ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் உண்மையாகவே பாலா சிங், என்னை உதைத்து விட்டார். ஏனெனில், அந்தக் காட்சி கூடுதல் உணர்ச்சிப்பூர்வமாக இருக்க வேண்டுமென இயக்குநர் செல்வராகவன் கூறினார்.இதனால், கண்ட்ரோல் செய்ய முடியாமல் பாலா சிங் உதைத்து விட்டார். இந்தக் காட்சியை எடுத்த பின்னர், கேரவன் சென்று வலியால் அழுதேன். இதையறிந்த செல்வராகவன், வலி அதிகமாக இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். அப்படி உருவான காட்சியை தான் திரையில் மக்கள் பார்த்தார்கள்” என சினேகா தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது கடினமானது என தனுஷ், பார்த்திபன், கார்த்தி என அவருடன் பணியாற்றிய பலரும் கூறியுள்ளனர். அந்த வரிசையில், நடிகை சினேகாவும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன