இலங்கை
வீடு முழுவதும் ஒன்லைன் பொருட்கள் ; பாட்டியின் வித்தியாசமான தீர்மானம்

வீடு முழுவதும் ஒன்லைன் பொருட்கள் ; பாட்டியின் வித்தியாசமான தீர்மானம்
உறவினர்களுக்குக் கடன் கொடுக்க விரும்பாத சீன நாட்டுப் பாட்டி ஒருவர், இணையவழியினூடாக பொருட்களை வாங்கி வீடு முழுவதும் நிரப்பி வைத்துள்ளார்.
இதுவரை அவர், 8 கோடி ரூபாய்க்கு அதிகமாகப் பொருட்களை வாங்கியும், அவற்றை உபயோகப்படுத்தாமல் வைத்துள்ளார்.
மேலும், இந்த பொருட்கள் அனைத்தும் வைப்பதற்கு அவரது வீட்டில் இடம் போதாமையினால், புதிதாக ஒரு வீட்டை வாடகைக்கும் அவர் எடுத்துள்ளார்.
இதேவேளை, இந்த சீன நாட்டுப் பாட்டி, தனிமையால் வாழ்வதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிய காரணத்தினாலேயே இந்த காரியத்தினை செய்து வருவதாக, அந்த அந்த நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.