சினிமா
அம்மாவுடனே இருக்க ஆசை.!– சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்ட சரோஜா தேவி.!

அம்மாவுடனே இருக்க ஆசை.!– சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்ட சரோஜா தேவி.!
இந்திய திரையுலகின் பொற்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நடிகைகளில் ஒருவர், பத்மபூஷண் பி. சரோஜா தேவி. தமிழ்த் திரையுலகில் மட்டும் அல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சிறப்பாக நடித்திருந்தார்.அவரது இயற்கை மரணம் திரையுலகிற்கே ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. தற்போது, சென்னபட்டணா தாலுகா தசவாரா கிராமத்தில், அவரது சொந்த ஊரில், அவர் கூறிய விருப்பத்தின்படி இறுதிச்சடங்கு நடை பெற்றுள்ளது.சரோஜா தேவி அவர்கள் பல ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வந்தாலும், சென்னபட்டணா தாலுகா தசவாரா கிராமம் என்ற அவரது சொந்த ஊருடன் உள்ள பாசத்தைக் கைவிடவில்லை. அதே இடத்தில் தான், தனது இறுதிச் சடங்கும் நடைபெற வேண்டும் என, சரோஜா தேவி முன்கூட்டியே விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க, தற்போது அரச மரியாதையுடன், தாயார் கல்லறையின் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.