உலகம்
இஸ்ரேலின் வான்தாக்குதலில் சிறுவர்கள் உட்படப் பலர் சாவு!

இஸ்ரேலின் வான்தாக்குதலில் சிறுவர்கள் உட்படப் பலர் சாவு!
மத்திய காஸாவில் நீர்விநியோகம் இடம்பெறும் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்படப் பத்துப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஏழு சிறுவர்கள் உட்பட 16 பேர் காயங்களுக்குள்ளாகிச் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. நுசெய்ரெத் அகதி முகாமில் தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்துக்கு அருகில் வரிசையில் நின்றிருந்த மக்கள்மீது ஆளில்லா விமானத் தாக்குதல் இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறால் பொதுமக்கள் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள இஸ்ரேல் இஸ்லாமிய ஜிகாத் பயங்கர வாதியே இலக்கு வைக்கப்பட்டார். ஆனால் இலக்குத் தவறியது எனத் தெரிவித்துள்ளது.