Connect with us

இலங்கை

உலகின் மிகவும் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் மரணம்

Published

on

Loading

உலகின் மிகவும் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் மரணம்

  உலகின் மிகவும் வயதான மரதன் ஓட்டப்பந்தய வீரர் என்று அறியப்படும் பௌஜா சிங் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

114 வயதான பௌஜா சிங் இந்தியாவில், பஞ்சாபில் உள்ள தனது சொந்த கிராமத்தில் திங்கட்கிழமை (14) நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.

Advertisement

விபத்தில் படுகாயமடைந்த அவர், ஜலந்தரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவை எழுத்தாளர் குஷ்வந்த் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

பௌஜா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை “தி டர்பண்ட் டோர்னாடோ” (The Turbaned Tornado) என்ற பெயரில் குஷ்வந்த் சிங் எழுதியுள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, பௌஜா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன