பொழுதுபோக்கு
எனக்கு நடிக்க தெரியாதா? நான் அமிதாப் மாதிரி நடிக்கனுமா? பாட்ஷா இயக்குனரை மடக்கிய ரஜினிகாந்த்!

எனக்கு நடிக்க தெரியாதா? நான் அமிதாப் மாதிரி நடிக்கனுமா? பாட்ஷா இயக்குனரை மடக்கிய ரஜினிகாந்த்!
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இருவரையும் வைத்து படம் இயக்கிய வெகு சில இயக்குனர்களில் முக்கியமானவர் சுரேஷ் கிருஷ்ணா. கமல்ஹாசன் நடிப்பில் 1988-ம் ஆண்டு வெளியான வெளியான சத்யா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து 1990-ம் ஆண்டு பிரபு நடிப்பில் ராஜா கைய வச்சா என்ற படத்தை இயக்கினார். மலையாளம் தெலுங்கு மொழிகளில் சில படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா 1992-ம் ஆண்டு அண்ணாமலை என்ற படத்தை இயக்கினார்.ரஜினிகாந்த் – சுரேஷ் கிருஷ்ணா முதல் முறையாக இணைந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும், சுரேஷ் கிருஷ்ணாவுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது. அதன்பிறகு, 1994-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வீரா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா 1995-ம் ஆண்டு இயக்கிய படம் பாட்ஷா. இந்தியில் வெளியான ஹம் படத்தின் கதையை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழுக்கு ஏற்றபடி திரைககதை அமைக்கப்பட்ட இந்த படம் கேஙஸ்டர் படங்களுக்கு முன்னோடியாக உள்ளது.தமிழில் வெளியான கமர்ஷியல் கேங்ஸ்டர் படங்களை எடுத்துக்கொண்டால் அதில் பாட்ஷா படத்திற்கு தனி இடம் உண்டு. நக்மா, ரகுவரன், ஜனகராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்துகொண்டுள்ளார். தான் ரஜினி படத்தை இயக்குவதற்கு முன் அவர் நடித்த படங்கள் எதையுமே பார்த்ததில்லை. ஆனால் முதல்முறையாக அண்ணாமலை இயக்கும்போது அவரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டேன்.அதன்பிறகு பாட்ஷா படத்தில் நடித்தபோது, அவரின் ஸ்டைல் எனக்கு அமிதாப் பச்சனை பார்த்ததுபோல் இருந்தது. நான் மும்பையில் இருந்ததால், அமிதாப் பச்சன் படம் தான் அதிகம் பார்த்திருக்கிறேன். அவரின் நடிப்பு ஸ்டைல் எல்லாம் தனியாக தெரியும். அந்த மாதிரி, பாட்ஷா பட ஷூட்டிங்கில், சார் அமிதாப் இப்படி நடிப்பார், அமிதாப் பமாதிரி பண்றீங்க என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இதை பார்த்த ரஜினிகாந்த் ஒரு கட்டத்தில், நான் அமிதாப் மாதிரி நடிக்கனுமா? ஏன் எனக்கு நடிக்க தெரியாதா என்று கேட்டார்.மேலும் யூனிட்டில் இருந்த பலரிடமும், அமிதாப் பச்சன் மாதிரி நடிக்க சொல்கிறார். ஏன் எனக்கு நடிக்க தெரியாதா என்று கலாட்டா செய்தார். இல்லை சார் நான் அமிதாப் படங்களை பார்த்து வளர்ந்தால், என் மைண்டில் எப்போதுமே அவர் இருப்பார். இப்போது ஒரு சீன் எடுத்தால் அமிதாப் இந்த சீனில் எப்படி நடிக்கார் என்று யோசிப்பேன். அதேபோல் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான ரஜினி வந்ததற்கு காரணம் நான் அதற்கு முன்பு அவரின் படங்கள் பார்க்காதது தான் என்று சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.