சினிமா
என்னிடம் அப்படி கேட்ட முதல் ஹீரோ விஜய்.. நடிகை ரம்பா ஷாக்கிங் பேட்டி

என்னிடம் அப்படி கேட்ட முதல் ஹீரோ விஜய்.. நடிகை ரம்பா ஷாக்கிங் பேட்டி
விஜய் மற்றும் நடிகை ரம்பா 90களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை ரம்பா தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த ‘நினைத்தேன் வந்தாய்’ திரைப்படம் குறித்தும் விஜய் குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில், ” அந்தப் படத்தில் விஜய் சார் கனவு கண்டுகொண்டே இருப்பார். நான் எங்கேயோ தொங்கிக் கொண்டிருப்பேன், அவர் எங்கேயோ ஆடி கொண்டிருப்பார்.என் திரையுலக வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கதாநாயகன், நான் லண்டன் போகிறேன், உங்களுக்கு ஏதாவது வாங்க வேண்டுமா என்று சொல்லுங்கள், நான் வாங்கிட்டு வருகிறேன்’ என்று கேட்டார். அவர் மிகவும் பணிவானவர், எனக்கு மிகவும் பிடித்த நடிகரும் கூட” என்று தெரிவித்துள்ளார்.