இலங்கை
கடந்த 7 மாதங்களில் 68 துப்பாக்கிச்சூடுகள்!

கடந்த 7 மாதங்களில் 68 துப்பாக்கிச்சூடுகள்!
கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிக் காவல்துறைக் கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
50 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை எனவும் ஏனைய 18 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டவை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 39 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.