பொழுதுபோக்கு
கண்ட்ரோல் பண்ண முடியல, விலகிட்டோம்; பீட்டர் பால் இறப்புக்கு போகாதது ஏன்? உண்மை உடைத்த வனிதா?

கண்ட்ரோல் பண்ண முடியல, விலகிட்டோம்; பீட்டர் பால் இறப்புக்கு போகாதது ஏன்? உண்மை உடைத்த வனிதா?
நடிகை வனிதா விஜயகுமார், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசினார். குறிப்பாக, தனது முன்னாள் கணவர் பீட்டர் பால் உடனான உறவு, அவரது மறைவு மற்றும் குடும்ப உறவுகள் குறித்துப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் பீட்டர் பால் திருமணம் ஜூன் 27, 2020 அன்று வனிதாவின் வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. இது வனிதாவுக்கு மூன்றாவது திருமணமாகும். இந்தத் திருமணம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.திருமணம் நடந்த சில மாதங்களிலேயே வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்தனர். பீட்டர் பாலின் மதுப் பழக்கம்தான் இந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக வனிதா தெரிவித்திருந்தார். பீட்டர் பால் தனது கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, ஏப்ரல் 2023 இல் காலமானார். அவரது மறைவின்போதும், தான் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாததற்கான காரணங்களை வனிதா விளக்கினார்.பீட்டர் பால் மறைவின்போது தான் ஏன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை என்பதை சமீபத்தில் கலட்டாவுக்கு அளித்த நேர்காணலில் வனிதா விளக்கினார். “அவருடைய இறுதி மரணத்திற்கும் கூட நான் போகவில்லை. ஏனெனில், நாங்கள் நீண்ட காலமாக ஒன்றாக இல்லை. அவர் விலகி இருந்த அந்த நேரத்தில், அவர் தனியாகத்தான் இருந்திருக்கிறார். அவர் அம்மாவோடுதான் இருந்திருக்கிறார்,” என்று வனிதா கூறினார். தான் அங்கு சென்றிருந்தால், அது தனக்கு எதிராகவே மாறியிருக்கும் என்றும், அவருக்கு இப்போது நிம்மதி கிடைக்கட்டும், அதை தான் கெடுக்க விரும்பவில்லை என்பதாலேயே அமைதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.பீட்டர் பாலை தான் முதன்முதலில் சந்தித்தபோது அவருக்கு எந்தவிதமான பழக்கங்களும் இல்லை என்றும், ஆனால் தங்கள் பிரிவுக்குப் பிறகு, அவர் மீண்டும் பழைய பழக்கங்களுக்குச் சென்றுவிட்டதாகவும், அதை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் வனிதா வருத்தத்துடன் குறிப்பிட்டார்.தனது குடும்பம் சிதைந்து போனதற்கு வெளியிலிருந்து வந்த மூன்றாம் நபர்கள்தான் காரணம் என்றும், தனது தாயின் மறைவுக்குப் பிறகுதான் அவருடன் மிகவும் நெருக்கமாக உணர்வதாகவும் வனிதா உருக்கமாகப் பேசினார்.