சினிமா
குடும்பம் ஒதுக்கிட்டாங்க..பிரைவேட் ஜெட் வாங்கிட்டேனா…ஆனா!! பிக்பாஸ் நடிகை ஆயிஷா ஓபன் டாக்..

குடும்பம் ஒதுக்கிட்டாங்க..பிரைவேட் ஜெட் வாங்கிட்டேனா…ஆனா!! பிக்பாஸ் நடிகை ஆயிஷா ஓபன் டாக்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானவர் நடிகை ஆயிஷா. மாயா, பொன்மகள் வந்தால், ராஜா மகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.63 நாட்கள் இருந்து எவிக்ட்டாகி வெளியேறி ஆயிஷா, அதன்பின் பல நிகழ்ச்சிகளிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினார்.ஆயிஷா தனி பிரைவேட் ஜெட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். பிரைவேட் ஜெட் வாங்கிவிட்டதாக பலரும் ஷாக்கான நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் உண்மையை பகிர்ந்துள்ளார் ஆயிஷா.அதில், என் குடும்பம் துபாயில் இருக்கிறார்கள். நான் சினிமாத்துறைக்கு வந்தது என் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை, அவர்களுடன் பல ஆண்டுகளாக நான் பேசுவது கிடையாது.என்னுடைய நண்பரின் ஜெட் தான் அது. நாங்கள் எல்லோரும் சேர்ந்து டூருக்கு சென்றோம். அங்கு நான் எடுத்த போட்டோஸை பார்த்து, நான் ஜெட் வாங்கிவிட்டேன்னு அவர்களே நம்பிவிட்டார்கள். நான் கூடிய சீக்கிரமே வாங்குவேன் என்று ஆயிஷா கூறியிருக்கிறார்.