வணிகம்
குறைந்த வட்டியில் அதிக பணம் கடன்… அதிரடி முடிவை எடுத்த 4 முக்கிய வங்கிகள்

குறைந்த வட்டியில் அதிக பணம் கடன்… அதிரடி முடிவை எடுத்த 4 முக்கிய வங்கிகள்
கடந்த சில நாட்களில், கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட முன்னணி வங்கிகள் தங்கள் நிதி செலவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கடன் விகிதங்களை (Marginal Cost of Funding Based Rates – MCLR) குறைத்துள்ளன. கடந்த மாதம் (ஜூன் 6) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததை தொடர்ந்து, பெரும்பாலான வங்கிகள் தங்கள் கடன் விகிதங்களை ஓரளவு குறைத்தன. ஜூன் மாதத்தில் நடந்த இந்தக் குறைப்பு, ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான மூன்றாவது விகிதக் குறைப்பாகும். இது கடன் வட்டி விகிதக் குறைப்பு சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இதன் தாக்கம் தற்போது வங்கிகளின் எம்.சி.எல்.ஆர் குறைப்பில் வெளிப்படுகிறது.2016 ஆம் ஆண்டில் அடிப்படை விகித முறைக்கு பதிலாக இந்த எம்.சி.எல்.ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எம்.சி.எல்.ஆர் என்பது ரெப்போ வட்டி விகிதத்தைச் சார்ந்தது; அதாவது, ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை மாற்றியமைக்கும் போது, எம்.சி.எல்.ஆர் விகிதங்களும் அதற்கேற்ப மாறும்.கனரா வங்கி: ஒரு மாத எம்.சி.எல்.ஆர் 8%, மூன்று மாத எம்.சி.எல்.ஆர் 8.20%, ஆறு மாத எம்.சி.எல்.ஆர் 8.55%, ஒரு வருட எம்.சி.எல்.ஆர் 8.75%, இரண்டு வருட எம்.சி.எல்.ஆர் 8.90%, மூன்று வருட எம்.சி.எல்.ஆர் 8.95% ஆகும்.ஹெச்.டி.எஃப்.சி வங்கி: ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் ஜூலை 7 அன்று தனது எம்.சி.எல்.ஆர் விகிதங்களை திருத்தியுள்ளது. ஒரே நாள் மற்றும் ஒரு மாத எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.60%, மூன்று மாத எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.65%, ஆறு மாதம், ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.75%, மூன்று வருட எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.80%. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கி: பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது அனைத்து கால அவகாசங்களுக்கும் எம்.சி.எல்.ஆர் விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. அதன்படி, ஒரே நாள் எம்.சி.எல்.ஆர் விகிதம் 8.20%, ஒரு மாத விகிதம் 8.35%, மூன்று மாத விகிதம் 8.55%, ஆறு மாத விகிதம் 8.75%, ஒரு வருட விகிதம் 8.90%, மூன்று வருட விகிதம் 9.20% ஆகும்.பேங்க் ஆஃப் பரோடா: பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் தனது நிதிச் செலவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கடன் விகிதங்களைக் குறைத்துள்ளது. ஒரே நாள் எம்.சி.எல்.ஆர் 8.10%, ஒரு மாத விகிதம் 8.30%, மூன்று மாத விகிதம் 8.50%, ஆறு மாத விகிதம் 8.75%, ஒரு வருட விகிதம் 8.90% என நிர்ணயித்துள்ளது.