இலங்கை
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை
இரத்தினபுரியில் நிவித்திகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்மோருவ சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நிவித்திகல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலம்பகம, நிவித்திகல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கும் மூன்ற நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.