இலங்கை
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சமுர்த்திப் பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி கௌரவிப்பும் சமுர்த்தி முகாமையாளர் றியாத ஏ மஜீத் எழுதிய இலங்கையில் வறுமை ஒழிப்பு, சமுர்த்தித் திட்டத்தின் வகிபாகம் புத்தக வெளியீட்டு நிகழ்வும்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் அரங்கில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீ.டி, களுவராச்சி மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.ஜெகராஜன், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் எம்.ஜி.எஸ்.எஸ்.கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.