இலங்கை
டுபாய் சென்ற இளைஞன் விமான நிலையத்தில் கைது

டுபாய் சென்ற இளைஞன் விமான நிலையத்தில் கைது
டுபாயில் இருந்து நாட்டிற்குள் 35 கிலோ தங்கத்தை கடத்த முயன்றதற்காக 32 வயதுடைய இலங்கை பயணி ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
அவர் 195 தங்க பிஸ்கட்கள் மற்றும் 13 கிலோகிராம் தங்க நகைகளை வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இதன் மொத்த மதிப்பு 1.1 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.