இலங்கை
திசைகாட்டி அரசாங்கம் திருடர்களைப் பாதுகாக்காது; பொன்சேகா புகழாரம்
திசைகாட்டி அரசாங்கம் திருடர்களைப் பாதுகாக்காது; பொன்சேகா புகழாரம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொள்ளையர்களைப் பாதுகாக்கவில்லை. புதிய அரசாங்கத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும் என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- சில துறைகளில் இந்த அரசாங்கம் பலவீனமாக உள்ளது என்பது தெரிகின்றது.
சிற்சில குறைபாடுகள் உள்ளன என்பது ஆட்சியாளர்களுக்கும் தெரியும். எனினும், கள்வர்களைப் பாதுகாத்தல் என்ற விடயத்திலிருந்து இந்த அரசாங்கம் நாட்டைப் காப்பாற்றியுள்ளது. குறுக்கு வழியில் சென்று கள்வர்களால் தப்பமுடியாது. குற்றவாளிகள் சட்டத்தின் பிடிக்குள் சிக்கினால், அவரைப் பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் தலையிடுவதில்லை. இது மிகச்சிறந்த விடயம். நாட்டை நேசிக்கும் மனிதனாக, இந்த விடயத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். இதற்குரிய கெளரவத்தை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும். கடந்த ஆட்சியாளர்களின் கீழ் இப்படி நடக்கவில்லை. கடந்த காலங்களில் கொள்ளையர்கள் பாதுகாக்கப்பட்டனர். இதை எவராலும் மறுக்கமுடியாது- என்றார்.