இலங்கை
தேங்காய் எண்ணெய் பொதியிடல் கட்டாயம்; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

தேங்காய் எண்ணெய் பொதியிடல் கட்டாயம்; அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு
பொதிசெய்யப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனையை நிறுத்துவற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணவக்க தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் பல்வேறு வகையான எண்ணெய்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன என்றும், அதைத்தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
கலப்பட எண்ணெய்களை உட்கொள்வதால் தொற்றாநோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன. சந்தையில் வெளியிடப்படும் எண்ணெய் உற்பத்தியாளர் உட்பட தேவையான அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய பொதியுடன் சந்தைக்கு விடப்பட வேண்டும். உரிய அவகாசம் வழங்கப்பட்ட பின்னர் இந்த நடைமுறையை இறுக்கமாகச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.