சினிமா
நடிகர் நெப்போலியனின் மகனை சந்திக்க அமெரிக்கா சென்ற மாதம்பட்டி ரங்கராஜ்!வைரலாகும் வீடியோ..!

நடிகர் நெப்போலியனின் மகனை சந்திக்க அமெரிக்கா சென்ற மாதம்பட்டி ரங்கராஜ்!வைரலாகும் வீடியோ..!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் நெப்போலியன், தனது மகன் தனுஷின் சுகாதார காரணங்களால் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குத் தற்காலிகமாக , நிரந்தரமாக குடிபெயர்ந்து விட்டார். தற்போது அங்கு ID நிறுவனத்தை நடத்தி வருகிறார்.நெப்போலியனின் மகன் தனுஷ், “Muscular Dystrophy” எனப்படும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது மரபணுக் குறைபாடால் ஏற்படும் அரிய நோயாகும். 10 வயதுக்குள் நடக்கும் திறனை இழந்த தனுஷின் சிகிச்சைக்காக நெப்போலியன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். மகனுக்காக வீடு முதல் கார் வரை அனைத்தையும் தன்னிச்சையான வசதிகளுடன் அமைத்துள்ளார்.இதுகுறித்த தகவல், யூடியூபர் இர்ஃபான் மூலமாகவே வெளியுலகத்திற்கு தெரியவந்தது. இர்ஃபான் அமெரிக்கா சென்று தனுஷை நேரில் சந்தித்த போது, நெப்போலியன் தன் மகனின் நிலைமை பற்றி பகிர்ந்திருந்தார். தனுஷ், இர்ஃபானின் தீவிர ரசிகராவதும் குறிப்பிடத்தக்கது.தனது மகனைப் போல் இந்த நோயால் பாதிக்கப்படும் ஏழை குழந்தைகளுக்காக, நெப்போலியன் “மயோபதி” எனும் இலவச சிகிச்சை மையத்தையும் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளார். தற்போது, நெப்போலியனின் மகனை சந்திக்க நடிகர்கள் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பரிதாபங்கள் கோபி – சுதாகர் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளதை அறிந்த ரசிகர்கள், உண்மையிலேயே இதுவொரு மனிதநேயத்தின் சிறந்த விடயம் எனக் கருதி வரவேற்பை பெற்று வருகின்றது.