உலகம்
நாட்டின் புலனாய்வுப் பிரிவை கலைக்கின்றது பங்களாதேஷ்

நாட்டின் புலனாய்வுப் பிரிவை கலைக்கின்றது பங்களாதேஷ்
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், நாட்டின் இராணுவப் புலனாய்வுப் பிரிவைக் கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸின் முடிவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானைப் போன்ற ஒரு தீவிர இஸ்லாமிய நாடாக நாட்டை மாற்றுவதே பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலுவான கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நடவடிக்கை ஆயுதப்படைகளை பலவீனப்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தை நசுக்கும் திட்டத்தின் ஒரு படி என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவப் புலனாய்வுச் சேவையை கலைப்பதன் மூலம் பங்களாதேஷ் சர்வதேச பயங்கரவாதத்துக்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது என்றும் அந்தநாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.