பொழுதுபோக்கு
படுக்கையில் நெப்போலியன் மகன்; மாதம்பட்டி ரங்கராஜ், கோபி, சுதாகர் அடுத்தடுத்து சந்திப்பு: காரணம் என்ன?

படுக்கையில் நெப்போலியன் மகன்; மாதம்பட்டி ரங்கராஜ், கோபி, சுதாகர் அடுத்தடுத்து சந்திப்பு: காரணம் என்ன?
தமிழ் சினிமா நடிகரும், அமெரிக்க தொழிலதிபருமான நெப்போலியன், தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், அவரின் மகன் தனுஷை, பரிதாபங்கள் கோபி சுதாகர் மற்றும் நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். 90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், படங்களில் பாடகராகவும் தன்னை நிரூபித்துள்ளார். அரசியலில் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.யாக இருந்த நெப்போலியன், மத்திய அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார்.ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் நெப்போலியனுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அவரது மூத்த மகன் தனுஷ் சிறுயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில, அவரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மேலும் சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வரும் நெப்போலியன், அவ்வப்போது இந்தியா வந்து செல்கிறார்.இதனிடையே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மூத்த மகன் தனுஷ்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் திருமணம் நடத்தினார் நெப்போலியன். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது. மேலும், தனுஷ் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. இது குறித்து நெப்போலியன் நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பிறகு வீடியோவை நீக்கினர்.இதனிடையே தற்போது நெப்போலியன் மகன் தனுஷை பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், பரிதாபங்கள் கோபி சுதாகர் ஆகியோர் சந்தித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கததில் நடிகர் நெப்போலியன் பதிவிட்டுள்ளார். கோபி சுதாகர் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள நெப்போலியன், சென்ற வாரம் அமெரிக்காவில் நடைபெற்ற அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்தற்காக வருகைதந்த இன்றைய இளைய தலைமுறைகள் அதிகம் விரும்பி பார்க்கும் யூடியூபில் தொடர்ந்து வரும் பரிதாபங்கள் என்ற நிகழ்ச்சியின் கதாநாயகர்கள், கோபி மற்றும் சுதாகர் இருவரையும் நானும் அமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சிக்கு சென்றதால் சந்திக்க முடிந்தது.A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)எங்கள் முத்த மகன் தனுஷ்க்கு மிகவும் பிடித்தவர்கள் என்பதால் எங்கள் வீட்டிற்க்கு அழைத்திருந்தேன். எனது அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்க்கு வருதை தந்து தனுஷூக்கு மகிழ்ச்சியையும், எங்களுக்கு மன நிறைவையும் தந்தார்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)அதேபோல் மாதம்பட்டி ரங்கராஜ் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள நெப்போலியன், அன்புள்ள நண்பர்களே, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த வாரம் அமெரிக்காவின் டென்னசி நாஷ்வில்லில் நடந்த எனது நண்பரின் மகனின் திருமணத்திற்கு வந்தார். அவர் எங்கள் வீட்டிற்கு வந்து தனுஷ் மற்றும் எங்கள் அனைவரையும் சந்தித்தார் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில், உங்கள் திருமணத்திற்கு என்னால் சமைக்க முடியவில்லை. ஆனால் நிச்சயத்திற்கு சமைத்தோம். நீங்கள் சாப்பிட்டீங்களா என்று கேட்க, அவர் இன்றும் உங்கள் சமையலை டேஸ்ட் செய்யவே இல்லை என்று நெப்போலியன் மனைவி கூறியுள்ளார்.