Connect with us

இலங்கை

பதவிக்கு நண்பனை சிபாரிசு செய்தார் அநுர – கம்மன்பில குற்றச்சாட்டு!

Published

on

Loading

பதவிக்கு நண்பனை சிபாரிசு செய்தார் அநுர – கம்மன்பில குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக நண்பனை தலைமை கணக்காய்வாளராக நியமிப்பதற்காக ஜனாதிபதி போட்ட திட்டத்தை  அரசியலமைப்பு பேரவையின் 3 சிவில் பிரஜைகள் தோற்கடித்துள்ளார்கள் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Advertisement

தலைமை கணக்காய்வாளர் பதவிக்கு கணக்காய்வாளர் திணைக்களத்தில் பதவி நிலை அடிப்படையில் தர்மபால கம்மன்பில என்பவர் உள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது களனி பல்கலைக்கழகத்தின் நண்பரை இந்த பதவிக்கு நியமிக்க தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பு பேரவைக்கு தனது நண்பரின் பெயரை சிபாரிசு செய்துள்ளார். ஜனாதிபதியின் சிபாரியை அரசியலமைப்பின் மூன்று  சிவில் பிரஜைகள் எதிர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் பெயர் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.

மழைக்கு கூட கணக்காய்வாளர் திணைக்களத்தின் பக்கம் ஒதுங்காத ஒருவரை பல்கலைக்கழக நண்பர் என்ற காரணத்துக்காக தலைமை கணக்காய்வு அதிபதியாக நியமிக்கும் முயற்சியை அரசியலமைப்பு பேரவையின் 3 சிவில் பிரஜைகள் தோற்கடித்துள்ளார்கள். 

Advertisement

இந்த மூவரின் பதவி காலம் 2026.01.03 ஆம் திகதியுடன் நிறைவடையும், இதன் பின்னர் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே பதில் தலைமை கணக்காய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயற்பாடு முறையற்றது. அரசாங்கத்தின் முறையற்ற போக்கினை நாட்டு மக்கள் அவதானிக்க வேண்டும் என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன