Connect with us

இலங்கை

பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம் ; நாடகக் குழுவினருக்கு குவியும் பாராட்டு

Published

on

Loading

பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம் ; நாடகக் குழுவினருக்கு குவியும் பாராட்டு

மவுஜ் என்ற நாடக குழுவினர் செயற்கை நுண்ணறிவு உதவியுன் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர்.

நாடகத்தை யோகேஸ்வர் கரேரா என்பவர் இயக்கியுள்ளார். இந்த நாடகத்துக்கு மக்கள் இடையே வரவேற்பும், விமர்சகர்களின் பாராட்டுகளும் கிடைத்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக யோகேஸ்வர் கூறுகையில், ராமாயணத்தை மேடையில் அரங்கேற்றியது சிறப்பானது. இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதனால் எந்த பின்னடைவும், பாதுகாப்பு சவால்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

உமைர் அலவி என்ற விமர்சகர் கூறுகையில், ‘ கதை சொல்வதில் உள்ள நேர்த்தியிலும், நேரடி இசை , வண்ணமயமான உடைகள் மற்றும் மனதை தொடும் வடிவமைப்புகள் அனைத்தும் நிகழ்ச்சியின் பிரமாண்டத்துக்கு கூடுதல் அழகை கொடுத்தது.

Advertisement

உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான மக்களை எதிரொலிக்கும் ஒரு நிகழ்வு என்பதால், சிறப்பாக அமைந்தது எனத் தெரிவித்தார்.

ராமாயண நாடகத்தை தயாரித்த ராணா காஸ்மி, சீதையாக நடித்து இருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன