பொழுதுபோக்கு
முதல் சவுத் இந்தியன் படம்; மறக்க முடியாத அந்த 9 நிமிடம்: டான்ஸ் பற்றி மனம் திறந்த சிம்ரன்!

முதல் சவுத் இந்தியன் படம்; மறக்க முடியாத அந்த 9 நிமிடம்: டான்ஸ் பற்றி மனம் திறந்த சிம்ரன்!
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகள் என்ற பட்டியல் எடுத்துக் கொண்டால், அதில் சிம்ரன் பெயர் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவிற்கு காலத்தால் அழிக்க முடியாத பாத்திரங்களை சிம்ரன் ஏற்று நடித்துள்ளார்.குறிப்பாக, ‘ஒன்ஸ்மோர்’, ‘நேருக்கு நேர்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘பிரியமானவளே’, ‘பஞ்ச தந்திரம்,’பேட்ட’ என்று பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை சிம்ரன் பிடித்துள்ளார்.இது மட்டுமின்றி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என்று ஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்களும் சிம்ரனுடன் இணைந்து நடித்துள்ளனர். தற்போது, கூட சிம்ரன், சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தில் இலங்கை தமிழர் பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை சிம்ரன் வெளிப்படுத்தினார்.மேலும், நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் சிம்ரன் சிறந்து விளங்குகிறார். இந்நிலையில், தனது நடனம் மற்றும் அதில் கலா மாஸ்டரின் பங்களிப்பு குறித்து சினி உலகம் யூடியூப் சேனல் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்வில் பல்வேறு விஷயங்களை சிம்ரன் மனம் திறந்து கூறியுள்ளார்.அதன்படி, “கலா மாஸ்டர் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார். பல புதிய நடன அசைவுகளை எனக்கு முதலில் கற்றுக் கொடுத்தது கலா மாஸ்டர் தான். என்னுடைய முதல் தென்னிந்திய திரைப்படம் மலையாளத்தில் அமைந்தது.1996-ஆம் ஆண்டு அந்தப் படம் எடுக்கப்பட்டது. அப்படத்திற்கு கலா மாஸ்டர் தான் கொரியோகிராஃபர் ஆக இருந்தார். அப்போது ஜெய்பூரில் படப்படிப்பு நடைபெற்றது. அங்கிருந்து பேருந்தில் டெல்லி வந்தடைந்தோம்.அப்போதைய பல நினைவுகளை மறக்க முடியாது. குறிப்பாக, 9 நிமிடங்கள் ஒரு பாடலுக்கு தொடர்ந்து நடனமாட வேண்டி இருந்தது. எப்போது, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் கலா மாஸ்டர் தான் எனக்கு நடனம் அமைத்து தர வேண்டும் என்று கண்டிஷனாக விழா ஏற்பாட்டாளர்களிடம் கூறி விடுவேன்.அந்த வகையில் நிறைய கலை நிகழ்ச்சிகள் மற்றும் தெலுங்கு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அனைத்து மொழிகளிலும் பணியாற்றிய பெருமை கலா மாஸ்டருக்கு இருக்கிறது” என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.