Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்தில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை

Published

on

Loading

யாழ்ப்பாணத்தில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும் ,தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

‘இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025’ என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கச்சாயில் ஆரம்பமானது.

Advertisement

குறித்த செயற்திட்டத்திற்காக கொழும்பில் இருந்து 150 இயந்திரங்கள், 150 பணியாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனாலும் ஓர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆகக் குறைந்தது 4 பேர் தேவை. 

எனவே ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்களை எதிர்பார்த்துள்ளனர்.

செயற்றிட்டத்துக்கு தன்னார்வமாக உதவி செய்ய விரும்புவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தனை 0766904580 எனும் தொலைபேசி இயக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

images/content-image/1752605215.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன