பொழுதுபோக்கு
‘வில்லன்’ குட்டி அஜித்; இவர்களை ஞாபகம் இருக்கா? இப்போ இவ்ளோ வளர்ந்துட்டாங்களே!

‘வில்லன்’ குட்டி அஜித்; இவர்களை ஞாபகம் இருக்கா? இப்போ இவ்ளோ வளர்ந்துட்டாங்களே!
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று பெயரெடுத்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த இரு படங்களில் ஒன்று வில்லன். பெரிய ஹிட்டடித்த இந்த படம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இதற்கு காரணம் அஜித்தின் நடிப்பு எ்னறாலும். அஜித்தின் சிறுவயது கேரக்டரில் நடித்த அந்த இரு சிறுவர்களும் ஒரு காரணம். இப்போது அவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் தெரியுமா?தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர், ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் தான் வில்லன். யூகி சேது கதை எழுதிய இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். வில்லன் படம் தான் அஜித் – கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் இணைந்த முதல் படம். அஜித்துடன், மீனா, கிரண், விஜயகுமார், பாண்டு, கருணாஸ், ரமேஷ் கண்ணா, உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருந்தார். அஜித் சிவா – விஷ்ணு என இரு கேரக்டரில் நடித்திருந்த வில்லன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், காலங்கள் கடந்தாலும் இந்த படம் இப்போது கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது. வில்லன் திரைப்படம் இப்போதும் கவனம் ஈர்க்கும் படமாக அமைந்திக்க முக்கிய காரணம் அஜித்தின் நடிப்பு என்றாலும் மற்றொரு காரணம் என்ன என்றால், இந்த படத்தில் இளம் வயது அஜித் கேரக்டரில் நடித்த இரட்டை சிறுவர்கள் தான். தினேஷ் ஷா, நரேஷ் ஷா ஆகிய இரட்டையர்கள் தான் சிவா – விஷ்ணு கேரக்டரில் நடித்திருந்தனர். சிறுவர்களாக இருந்தாலும் நடிப்பில் அசத்திய இவர்கள், அதன்பிறகு வேறு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் வில்லன் திரைப்படம் நினைவுக்கு வந்தால் அஜித்தை போல் இந்த சிறுவர்களும் நினைவுக்கு வருவார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் அளித்த பேட்டியில், வில்லன் திரைப்படம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளனர். இதில், நரேஷ் ஷா அண்ணன், ஆனால் படத்தில் அவர் விஷ்ணு என்ற தம்பி கேரக்டரிலும் ஒரிஜினலாக தம்பியாக இருக்கும் தினேஷ் ஷா படத்தில் அண்ணன் கேரக்டரிலும் நடித்திருந்தனர். விஷ்ணு கை கால் உடைந்து படுத்திருக்கும்போது அண்ணன் சிவா அழ வேண்டும். இந்த காட்சி படமாக்கும்போது தினேஷ் ஷா சரியாக அழாத நிலையில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவரை கன்னத்தில் 3 முறை அறைந்துள்ளார். அப்போது சுற்றியும் யூனிட் கூட்டம் இருந்தால் அழக்கூடாது என்று நினைத்த தினேஷ் காட்சியை நடித்து முடித்தவுடன், நீ நன்றாக நடிக்க வேண்டும் என்பதால் தான் அடித்தேன் சாரி என்று கே.எஸ்.ரவிக்குமார் சொல்ல, அதன்பிறகு பலமாக அழுததாக, கூறியுள்ளார். இந்த படத்திற்காக விருது வழக்கியபோது மீனா மற்றும் ரோஜா ஆகியோர் விருது கொடுத்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் ஆச்சி மனோரமா நடிப்பை பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் தினேஷ் ஷா தான் ஒரு விஜய் ரசிகர் என்றும், நரேஷ் ஷா அஜித் ரசிகர் என்றும் தங்கள் இருவருக்குமே இது குறித்து க்ளாஷ் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. க்ளாஷ் வந்திருக்கு என்றும் கூறியுள்ளனர். வில்லன் படத்திற்கு பிறகு தினேஷ் ஷா சரத்குமாரின் பாறை என்ற படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு படிப்பில் கவனம் செலுத்திய இவர்கள் மீண்டும் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளனர்.