இலங்கை
வெற்றிலை, பாக்கு விலை அதிகரிப்பு!

வெற்றிலை, பாக்கு விலை அதிகரிப்பு!
சந்தையில் வெற்றிலை, பாக்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பெரிய வெற்றிலை ஒன்று 10 ரூபாவுக்கும், சிறிய வெற்றிலை ஒன்று 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் பாக்கின் விலையும் அதிகரித்துள்ளது. விலை அதிகரிப்பால் வெற்றிலை மற்றும் பாக்கு விற்பனை குறைவடைந்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.