இலங்கை
வெளிநாடுகளில் இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெற புதிய வழி

வெளிநாடுகளில் இலங்கையர்கள் கடவுச்சீட்டு பெற புதிய வழி
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக, கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு, இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்கள் ஊடாக, அந்தந்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளுக்கான இணைய விண்ணப்ப செயல்முறையைத் துரிதப்படுத்துவதற்கான, முன்மொழிவுகள், புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 20 தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களை உள்ளடக்கிய வகையில், தேவையான வசதிகளை வழங்குவதற்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் நிகழ்நிலையில் தொடர்பு கொள்வதற்கான வசதிப்படுத்தலை மேற்கொள்வதற்கும், முன்மொழியப்பட்டுள்ளது.