Connect with us

சினிமா

“ஹாரி பாட்டர்” வெப் தொடராக உருவாகிறது…!புதிய ஹீரோக்களின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

Published

on

Loading

“ஹாரி பாட்டர்” வெப் தொடராக உருவாகிறது…!புதிய ஹீரோக்களின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!

ஜே. கே. ரவுலிங் எழுதிய பிரசித்தி பெற்ற ‘ஹாரி பாட்டர்’ நாவலை அடிப்படையாக கொண்டு, வார்னர் புரோஸ் நிறுவனம் தயாரித்த 8 படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களின் பேராதரவை பெற்றன. டேனியல் ராட்க்ளிப், எம்மா வாட்சன், ரூபர்ட் கிரின்ட் ஆகியோர் ஹாரி, ஹெர்மியோன் மற்றும் ரான் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்போது, இந்த மாயாஜால உலகம் வெப் சீரிஸாக உருவாகிறது. எச்பிஓ நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய தொடரின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது. இந்த ஹாரி பாட்டர் வெப் சீரிஸின் முதல் லுக் வெளியாகியுள்ளது.மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய நடிகர்களின் பெயர்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஹாரி பாட்டராக டொமினிக் மெக்லக்லின், ஹெர்மியோன் கிரேஞ்சராக அரபெல்லா ஸ்டாண்டன் மற்றும் ரான் வீஸ்லியாக அலஸ்டர் ஸ்டவுட் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் 30 ஆயிரம் பேருக்கும் மேல் ஆடிஷனில் கலந்துகொண்ட நிலையில், பல சுற்றுகளுக்குப் பிறகு இந்த மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த வெப் சீரிஸ், நாவலின் ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரு பருவமாக மையமாக கொண்டு விரிவாக உருவாக்கப்படுகிறது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த தொடர், 2027ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன