பொழுதுபோக்கு
8-ம் வகுப்பில் சினிமா அறிமுகம்; 22 வயதில் தற்கொலை: சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகை யார்னு தெரியுதா?

8-ம் வகுப்பில் சினிமா அறிமுகம்; 22 வயதில் தற்கொலை: சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்த இந்த நடிகை யார்னு தெரியுதா?
மலையாளத் திரையுலகிற்கு திகில் படங்களை உருவாக்குவதில் ஆர்வம் அதிகம் அதிலும் யட்சிகள் (இறந்த பெண்களின் பேய்கள்) இடம்பெறும் படங்களை உருவாக்குவதில் அது அதீத விருப்பம் காட்டுகிறது.சமீப காலம் வரை, பூதகாலம் (2022) மற்றும் பிரம்மயுகம் (2024) போன்ற படங்களுடன் திகில் வகையை மேலும் புதுமையாக ஆராயத் தொடங்கியபோது, யட்சிகள்தான் பார்வையாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்த மலையாளத் திரைப்பட தயாரிப்பாளர்கள் நம்பிய ஒரு பொதுவான கருப்பொருளாக இருந்தன. இத்தகைய கதைகள் திரைக்கு வந்து கொண்டிருந்தாலும், சில படங்கள் மலையாளிகளால் குறிப்பாகப் போற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இயக்குனர் வினயனின் ஆகாஷகங்கா (1999). இது ஒரு புதுமையான திகில் படம் என்பதால் அல்ல, ஏற்கனவே பழக்கமான ஒரு கதையை சிறப்பாகப் பயன்படுத்தி உண்மையான திகில் இருப்பதால், இந்தப் படம் ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாகவே இன்றும் உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நடிகை மயூரிதான். அவர் இந்தப் படத்தில் கங்கா என்ற தாசிப் பெண்ணாக நடித்தார். ஒரு அரச குடும்பத்தின் தலைவரால், அவரது மகனுடனான காதல் உறவுக்காகக் கொல்லப்பட்ட கங்கா, பழிவாங்க ஒரு யட்சியாகத் திரும்பி வந்து குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களையும் பழிவாங்க கொல்கிறாள்.நடிகை திவ்யா உன்னி கங்காவின் ஆவியால் ஆட்கொள்ளப்படும் பெண்ணாக நடித்திருந்தாலும், படத்தில் பெரும்பாலான நேரம் பேயாகத் தோன்றியவர் அவர்தான். உண்மையான கங்கா அடிக்கடி திரையில் தோன்றி, மயூரியின் உருவத்தை பார்வையாளர்களின் இதயங்களில் என்றென்றும் பதிய வைத்தார்.இருப்பினும், ஆகாஷகங்கா மட்டும் மயூரிக்கு அங்கீகாரத்தைக் கொண்டு வரவில்லை. உண்மையில், அவர் தோன்றிய ஒவ்வொரு படத்திலும், அவரது பாத்திரம் எவ்வளவு பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தாலும், அவர் பார்வையாளர்களைக் கவர்ந்தார். அதனால்தான், 22 வயதில் அவர் தற்கொலை செய்து கொண்ட பிறகும், 20 வருடங்கள் கழித்தும் மயூரி இன்றும் நினைவில் போற்றப்படுகிறார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.1983 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்த மயூரி (இயற்பெயர் ஷாலினி) எட்டாம் வகுப்பு படிக்கும்போதே திரைப்படத்தில் அறிமுகமானார். இயக்குனர் கேயாரின் கும்பகோணம் கோபாலு என்ற தனது முதல் படத்தில், பாண்டியராஜனுக்கு ஜோடியாக நாயகி வேடத்தில் நடித்தார்.சிறுவயதாக இருந்தாலும் ஒரு செவிலியராக வயதான கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பும், அழகும் பார்வையாளர்களைக் கவர்ந்தன, மேலும் அவருக்குப் பல வாய்ப்புகளையும் கொடுத்தது. அதே ஆண்டில், சிபி மலயிலின் வெற்றி பெற்ற காதல் நகைச்சுவைப் படமான சம்மர் இன் பெத்லஹேம் (1998) மூலம் அவர் மலையாளத்தில் அறிமுகமானார்.இதில் சுரேஷ் கோபி, மஞ்சு வாரியர் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மோகன்லால் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருந்தபோதிலும், மயூரி ரசிகர்களிடையே எளிதில் மறக்கமுடியாத அன்பை பெற்றார். இது அவருக்கு மேலும் மலையாள வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர் மலையாளத்தில் பணியாற்றினார், பல முக்கிய படங்களில் நடித்தார். ஆகாஷகங்கா மற்றும் பாரியா வீட்டில பரமசுகம் (1999) தவிர, அவர் அப்போதைய இளவரசரான குஞ்சாக்கோ போபனுடன் சந்தாமாமா (1999) மற்றும் பிரேம் பூசாரி (1999) ஆகிய படங்களில் நடித்தார்.இந்த இரண்டிலும் அவர் நாயகி இல்லையென்றாலும், முறையே அன்னி மற்றும் சஞ்சல் கதாபாத்திரங்களில் அவரது நடிப்புகள் அனைவராலும் பாரட்டப்பட்டது. இது அவரது வசீகரமான முகம் மற்றும் கண்களும் இதற்கு காரணமாகும். புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஏ.கே. லோகிததாஸின் உணர்ச்சிமிக்க குடும்ப நாடகமான அறயண்ணங்களுடே வீடு (2000) படத்தில், மம்முட்டியின் கதாபாத்திரம் ரவீந்திரநாத் தனது இளமையில் காதலித்த ராகினியாக நடித்தார்.அவரது முந்தைய கதாபாத்திரங்களைப் போலல்லாமல், ராகினி மிகவும் உணர்ச்சி ரீதியாகவும் அடுக்குமாறாகவும் இருந்தார். பெரும்பாலான லோகிததாஸ் படைப்புகளைப் போலவே, இந்தக் கதாபாத்திரமும் நடிகை ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டியிருந்தது.மயூரி அதை அருமையாகச் செய்தார், எந்த ஒரு குறிப்பிட்ட வகைக்கும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். பின்னர் அவர் சம்மர் பேலஸ் (2000) மற்றும் சேத்தாரம் (2001) ஆகிய படங்களில் தோன்றினாலும், அந்தப் படங்கள் அவருக்கு அதே அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவில்லை.பின்னர் அவர் கன்னடத் திரைப்படமான நீலா (2001) இல் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார், பின்னர் தமிழில் கவனம் செலுத்தினார், அங்கு அவர் விசில் (2003) படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி (2004) இல், அவர் “நாம் வயசுக்கு வந்தோம்” பாடலில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் தோன்றினார்.அதைத் தொடர்ந்து, அவர் சிம்புவின் மன்மதன் (2004) மற்றும் சரத்குமாரின் ஆய் (2004) ஆகிய படங்களில் நடித்தார், ஆனால் எந்தப் படமும் அவரது திறனை உண்மையாக வெளிப்படுத்தவில்லை.அதே ஆண்டில், அவர் கன்னடத் திரைப்படமான சர்வபௌமா (2004) இல் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்தார், சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் திரையைப் பகிர்ந்து கொண்டார். அவரது இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றின் மனைவியாக சித்தரிக்கப்பட்ட அவர், இளைய மற்றும் வயதான தோற்றங்கள் இரண்டிலும் நன்கு நடித்து இருந்தார். 2005 இல், கே.வி. ஆனந்தின் தமிழ்த் திரைப்படமான கனா கண்டேன் இல் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார், பிருத்விராஜ் சுகுமாரனுடன் திரையைப் பகிர்ந்து கொண்டார், இது துரதிர்ஷ்டவசமாக அவரது கடைசி படமாக அமைந்தது.படம் வெளியான உடனேயே, ஜூன் 16, 2005 அன்று, தனது அண்ணா நகர் குடியிருப்பில் அவர் தூக்கிட்டு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார், தனது 22 வயதில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவரது இறப்புக்குப் பின்னணியில் உள்ள சரியான காரணம் இன்றும் தெரியவில்லை என்றாலும், அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோயுடன் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதை உறுதிப்படுத்தவில்லை. “என் மரணத்திற்கு யாருக்கும் எந்தப் பங்கும் இல்லை. வாழ்க்கையின் நம்பிக்கையை இழந்துவிட்டதால் நான் செல்கிறேன்,” என்று அவர் தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாக மனோரமா ஆன்லைன் தெரிவித்துள்ளது.சிறுவயதிலேயே சினிமா உலகிற்குள் நுழைந்த ஒரு உணர்வுமிக்க குழந்தை, திரையுலகின் இருண்ட யதார்த்தங்கள் அவரது மனநலத்தைப் பாதித்ததாகவும் வதந்தி பரவியது. பல சக ஊழியர்கள் அவரை படப்பிடிப்புகளுக்குப் பிறகு, தனது அறையில் பொம்மைகளுடன் விளையாடுவதைப் பார்த்ததாக நினைவு கூர்ந்தனர், து அவர் இன்னும் மனதளவில் ஒரு குழந்தை என்பதைக் காட்டுகிறது.பல சந்தர்ப்பங்களில், மயூரிக்கு ஒரு கதாப்பாத்திரம் உறுதியளிக்கப்பட்டதாகவும், பின்னர் வேறு ஒருவருக்கு அந்த கதாப்பாத்திரம் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் அவருக்கு ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் இன்றும் ஒரு மர்மமாகவே உள்ளது.சம்மர் இன் பெத்லஹெம் படத்தில் மயூரியுடன் நடித்த நடிகை சங்கீதா கிருஷ், ஒருமுறை கேரளா கவுமுதி வார இதழுக்கு அளித்த பேட்டியில், “மயூரி என்னை விட மூன்று வயது இளையவள், ஒரு அப்பாவி. என்னைக் கேட்ட பிறகுதான் அவள் தலையைக்கூட கட்டுவாள்.படப்பிடிப்பு முடிந்ததும், அவள் தனது அறையில் பொம்மைகளுடன் இருப்பாள். பின்னர் அவள் தற்கொலை செய்து கொண்டாள். தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டவை. இரண்டையும் ஒன்றாக எடுத்துச் செல்ல ஒருவருக்கு நெகிழ்வுத்தன்மை தேவை.” என்றார்.ஏழு ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் பணியாற்றினாலும், மயூரி ரசிகர்களுக்கு, குறிப்பாக மலையாளிகளுக்கு ஒரு மறக்க முடியாத இருப்பாகவே இருக்கிறார். “புது மழையாய் வந்து நீ”, “கன்ஃப்யூஷன் தீர்க்கணமே”, “தேவரகமே மேலே” அல்லது “மனசின் மணிசிமிழில்” போன்ற பாடல்களைக் கேட்கும்போது, அவரது மூச்சடைக்கக்கூடிய முகம் நம் நினைவுக்கு வருகிறது. அவரது அசாத்திய திறமையினால் அந்த முகம் ஒருபோதும் மங்காது.